சுருக்கெழுத்து, தட்டச்சுக்கலையின் பிதாமகரெனப் போற்றப்படக் கூடிய திரு.க.வ.சிவச்சந்திரதேவன் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தினை 1985இல் ஸ்தாபித்து மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அதனை செம்மையுற நிருவகித்து சுமார் 3,000 மாணவ மாணவிகளுக்கு சுருக்கெழுத்து, தட்டச்சினைப் போதித்து இன்று அவர்கள் நாடளாவிய ரீதியில் பல்வேறு அரசதுறைகளில் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள உறுதுணையாயிருந்தார்.
சமூகத்திலிருந்து என்றும் பிரித்துவிட முடியாத ஒப்பற்ற மாமனிதனது புகழை அவராற்றிய சேவையினை, மனிதநேயத்தினை, அவரது பணியினால் நன்மையடைந்த பலரது உள்ளக்கிடக்கைகளை குறுகிய காலப்பகுதியில் ஒருமிக்கத் தொகுத்து ஆவணப்படுத்தப்பட வேண்டிய ஒரு பாரிய பொறுப்பை அவரது மனைவி, பிள்ளைகள் முன்னெடுத்துள்ளனர். நாளைய சமூகமும் இவரது வழிகாட்டலில் பயணிக்கவேண்டிய விருப்பினையும் பல எடுத்துக்காட்டுக்களையும் இந்நூல் தாங்கியுள்ளது. எனவே இந்நூல் காலம் காலமாகப் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டிய ஓர் அரிய பொக்கிஷமாகும். சுருக்கெழுத்து, தட்டச்சுக்கலைபற்றி அறிய முற்படும் எவரும் திரு.க.வ. சிவச்சந்திரதேவன் அவர்களையோ அவரது சேவையினையோ நினைவிற்கொள்ளாது கடந்து செல்ல முடியாது. அதனையே இந்நூலும் பிரதிபலிக்கிறது.
😍🔥வாழ்த்துக்கள்❤
ReplyDeleteவாழ்த்துக்கள்😍
ReplyDelete