அமரர் வயிரவிப்பிள்ளை சிவச்சந்திரதேவன் அவர்கள் புற்றளையில் பிறந்து, உடுப்பிட்டியில் திருமணம் செய்து நான்கு குழந்தைச் செல்வங்களைப் பெற்றெடுத்தார். இவர் கல்வியிலும் விளையாட்டுத் துறையிலும் மிகுந்த ஆர்வமுடையவராயிருந்து மக்கள் வங்கியில் இணைந்து கொண்டார். இளைஞர் யுவதிகள் எமது அரும்பெரும் சொத்து எனக் கண்டார். அவர்களுடைய இளமைக்காலத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்துடன் மூன்று பாஷைகளிலும் பாண்டித்தியம் பெற்று விளங்க வேண்டுமென எண்ணினார்.
தமது
எண்ணத்தின் பிரகாரம் 01.10.1985 வடமராட்சிச் சுருக்கெழுத்துக் கழகத்தைத் தோற்றுவித்தார். அந்நிறுவனத்தை கரவெட்டி பிரதேச செயலகத்திலும் தொழிற்கல்வி
ஆணைக்குழுவிலும் முறைப்படி பதிந்து நடாத்தி
வந்தார். நெருக்கடி மிகுந்த காலத்தில் மிகவும் சாணக்கியமாக நடாத்திவந்தார். இளைஞர்களை ஒன்றுபடுத்தி பயிற்சி வழங்குவது சிரமமான காரியமாக இருந்தபோதிலும் அவர் மனம் தளரவில்லை.
நாட்கள் செல்லச் செல்ல பயிலுனர்கள் திணைக்களங்கள், நீதிமன்றங்கள், வங்கிகள் போன்ற நிறுவனங்களில் வேலைவாய்ப் பினைப் பெறத் தொடங்கினர். தமது பயிற்சியாளர்கள் அரச, தனியார் நிறுவனங்களில் வேலைசெய்து தங்கள் வீட்டிற்கு உதவியாக இருப்பதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். தமது பயிற்சியோடு நின்றுவிடாது
இம் மாணவர்கள் பல்கலைக்கழகங்கள் வெளிவாரிப் பட்டப்படிப்புக்கும் தூண்டுகோலாக இருந்தார். தமது கழகம் சுதந்திரமாக
செயற்படும் யாப்பு முறைமையையும் அமுல் செய்தார்.
அவருடைய
மறைவு அவர்களுடைய குடும்பத்திற்கு தாங்க முடியாத தவிப்பாக அமைந்துவிட்டது. இளைஞர் யுவதிகளும் தமது வழிகாட்டல் நாயகன்
இல்லையே‚ என்ற தவிப்பில் உள்ளனர்.
தம்முடைய வேலை, குடும்பம் என்றுமட்டுமில்லாமல் இளைஞர் யுவதிகளை பெறுமதிமிக்க சொத்துக்களாக்கிய உயர்ந்த உள்ளத்தின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்போம்.
எ.வே.விசுவலிங்கம்
முன்னாள்
அரச அதிபர்,
மன்னார்.
Comments
Post a Comment