மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து இவ்வுலகைவிட்டு நீங்கிய திரு. சிவச்சந்திரதேவனின் மறைவு எமக்கு மீளாத்துயரைத் தருவதாக அமைகிறது.
"இந்த
மண்ணில் பிறந்த எல்லா உயிர்களும் என்றோ ஒரு நாள் மரணிக்கும்" என்பது அறியாததல்ல. எனினும், அன்புக்குரியவர்களை நாம் பிரிய நேரிடும்போது
அந்த இழப்பு ஈடுசெய்ய முடியாததாகின்றது.
கொழும்பு
தமிழ்ச் சங்கத்தின் அங்கத்தவராக இணைந்து, தற்பொழுது பேரவையின் ஓர் உறுப்பினராகப் பதவிவகிக்கும்
அமரர், சங்கத்தின் நடவடிக்கைகளில் ஆத்மார்த்தமான அக்கறை கொண்டவர். சங்கத்தின்
நிகழ்ச்சிகளில் தவறாது கலந்து கொள்வதுடன், ஆக்கபூர்வமான கருத்துக்களைத் தெரிவிப்பதிலும் முன்நிற்பவர். குறிப்பாக, இளைஞர்களின் வளர்ச்சிக்காக தமிழ்ச் சங்கம் போதிய வாய்ப்புக்களை வழங்கவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தவர்.
நிறுவனரீதியாக
மட்டுமல்ல, எங்கள் குடும்பத்துடனும்
நெருங்கிப் பழகிய ஒருவர். 1973ஆம் ஆண்டில் எனது
அண்ணருடன் கல்வி கற்ற காலந்தொட்டு எங்கள்
குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.
இணுவில்
கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு எங்கள் வீட்டிலேயே தங்கி, அண்ணருடன் சென்று வருவார். அதுமட்டுமல்ல, அவரின் திருமணத்தின்போது மாப்பிள்ளை வீடாக எங்கள் வீடு அமைந்தது. அவர்
யாழ்ப்பாணம் சென்று வரும்பொழுது எனது சகோதரர்களைச் சந்திக்கத்
தவறுவதேயில்லை.
“ஒருவர்
வாழும் காலம் முக்கியமல்ல, வாழும் முறைதான் முக்கியம்” என்பார்கள். நல்லதொரு மகனாக, சகோதரனாக, கணவனாக, தந்தையாக, உற்ற நண்பனாக, சுற்றத்தானாக, கடமையுணர்வுமிக்க அரச ஊழியனாக இன்னோரன்ன
பாத்திரங்களைப் பண்புடன் வகித்த அமரர் இன்று எம்மிடையே இல்லை என என்னும் போது
இதயம் கனத்தாலும் அவருடைய ஆத்மா இறை நிழலில் இளைப்பாற
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதுடன், கொழும்பு தமிழ்ச் சங்கம் சார்பாகவும், என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் சார்பாகவும் அமரரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஓம்
சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
திரு
ஆ.குகமூர்த்தி
ஓய்வுநிலை விரிவுரையாளர்,
தொழில்நுட்பக்
கல்லூரி, மருதானை.
Comments
Post a Comment