Skip to main content

சிவச்சந்திரதேவன் மாஸ்டர் - உமா

.பொ.உயர்தர பரீட்சை எடுத்து முடித்த நேரத்தில் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் வடமராட்சிச் சுருக்கெழுத்துக் கழகத்தில் தட்டச்சுசுருக்கெழுத்து கற்பிப்பதை அறிந்து நானும் அந்தக் கழகத்தில் சேர்ந்து படித்தேன். அதன் ஸ்தாபகரும் ஆசிரியருமாக இருந்தவர் திரு. .. சிவச்சந்திரதேவன் (Master) ஆவார். அங்கே படித்து முடித்து YMCA  இலும், நான் படித்த கழகத்திலும் சிறிது காலம் வேலை பார்த்துவிட்டு அதன் பின்பு ETF (Employee Trust Fund Board) இல் தமிழ் தட்டெழுத்தாளராக மூன்று வருடங்கள் கொழும்பில் வேலை செய்து பின்பு வெளிநாட்டிற்கு வந்துவிட்டேன். இப்பொழுது அவரை இழந்த செய்தியை கேட்டு மிகவும் கவலையடைகின்றேன்

உமா


Comments