Skip to main content

ஆசிரியப் பெருந்தகை - ரஜனி லிங்கரட்ணம்

எமது சிவச்சந்திரதேவன் ஆசிரியர் அவர்களைப் பற்றிய ஒருசில செயற்பாடுகள் எம்மீது கொண்ட பற்றுதல்களை கண்ணீரால் எழுத முயற்சிக்கின்றேன். அவரைப்பற்றிப் புத்தகமே எழுதலாம்.

அன்பான, பண்பான, அறிவான ஆசிரியப் பெருந்தகை  மட்டுமல்ல,  அவரது கண்டிப்பும், இனிமையான பேச்சும், கனிவான நற்குணமும் எனக்கு மறக்க முடியாது. 

எமது இருபாலை (PWO) மக்கள் நலன் காக்கும் பிரிவிற்கு 1989 இல் வருகை தந்திருந்தார்.  அப்போது முதல் முதலாகச் சந்தித்தேன்.

அவர் எமது நிறுவனத்துடன் இணைந்து சுருக்கெழுத்து, தட்டச்சு பயிற்றுவித்தார்.

பின்பு தனது மாணவியான மாலினி மிஸ் அவர்களை எமக்கு அறிமுகப்படுத்தி, எமக்கு தட்டச்சு, சுருக்கெழுத்து கற்பதற்கு வழிகாட்டினார்.

அவர் தன்னைப் போலவே ஒரு நற்குணம் படைத்த மாலினி ஆசிரியை அவர்களை எமது ஆசானாக்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி.

சிவச்சந்திரதேவன் ஆசிரியர் அவர்கள் அறிமுகப்படுத்திய அதே ஆசிரியையான அவரது மாணவி மாலினி மிஸ் அவர்களது முகநூலில் நள்ளிரவு 12.30 மணியளவில் இந்தச் துயரச் செய்தி அறிந்து கனவாய் இருக்கக் கூடாதா எனப் புலம்பினேன்.

விடிந்ததும் எனது ஆசிரியையுடன் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு துக்கம் விசாரித்தேன்.

காலத்தின் கோலத்தால் கடல் கடந்து வாழ்ந்தாலும் களங்கமற்ற எங்கள் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்.

வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தின் ஒவ்வொரு நிகழ்விற்கும் எமது ..கா.பிரிவில் இருந்து எங்களை அழைப்பார்.

பெருந்தன்மை இல்லாத பெருந்தகையை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சக தோழமைகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

எனது பிரியாவிடையின் போது ஆசிரியர் அவர்கள் தந்த அன்புப் பரிசு இப்பவும் என்னிடம் இருக்கின்றது.

அதுமட்டுமன்றி சிவச்சந்திரதேவன் ஆசிரியர் நல்ல நட்புக்களையும் எமக்கு அறிமுகப்படுத்தி இருந்தார்.

மறக்க முடியாத ஆசிரியரின் கதைகள் சொல்லில் அடங்காது.

திருமதி ரஜனி லிங்கரட்ணம்
தட்டெழுத்தாளர் (1989 -1999 காலப்பகுதி)
மக்கள் நலன்காக்கும் பிரிவு, இருபாலை
(தற்போது சுவிஸ்லாந்து)


Comments