Skip to main content

நண்பரின் சொத்து - தனுஷ்கர் ரவீந்திரன்

கண்கள் கண்ணீர் சுமக்க...
கார்மேகமும் வானை காரிருள் சூழச்செய்தது!
நண்பன் சொரிந்த கண்ணீரில் இதயம் சில்லறையாய் நொருங்கியதே!
என் நண்பன் கற்ற முதல் ஆசான்!
என் நண்பனை தோளில் முதலில் ஏற்றிய ரதம்!
அவன் தந்தை!
என் நண்பனைக் காணும் போதெல்லாம்!
அவன் தந்தை பற்றிக் கூறிய நாட்களே அதிகம்!
ஆண்மகன்களின் முதல் ஹீரோ தந்தைகளே!
அதே போல என் நண்பன் ஹீரோஉம் அவன் தந்தை!
தான் பாராத உயரங்களை என் நண்பன் பார்த்திட வேண்டும் என்றே!
தன் தோள் மேல் அமர்த்தி வலம் வந்தவர்!
எத்தனை வேலைகள் இருந்தாலும் அக்கறை காட்டுவதிலும்!
அன்பு காட்டி அரவணைப்பதிலும்!
எங்கே என்று தேடுவதிலும்!
என் நண்பன் செய்யும் குறும்புகளை இரசிப்பதிலும்!
எந்நாளும் அவர் மறந்ததில்லை!
காலங்கள் செய்த கோலத்தில்!
அலங்கோலமாகியது இன்று!
என் நண்பனை விட்டு தந்தை மட்டும்!
தொலைதூரம் நடந்து கடந்து சென்ற மாயம்!
நிஜங்களாய் இருந்த இத்தனை ஆண்டுகளின் நினைவுகள்!
இனி என் நிழலாய் என் தந்தை வருவார் என்ற நினைப்புடன்!
என் நண்பன் இந்நாள் உறுதியாய் நின்றான்!
இனிவரும் நாட்களில் என்றும் மறையாத சுவடுகளில்!
இந்நாள் வடுக்கள் ஆறாது!
வலிகள் மாறாது!
இருந்தாலும் அவர் எப்போதும் என் நண்பன் அருகில் துணைவருவார்!

இப்படிக்கு நான்

நண்பனின் நண்பன்


தனுஷ்கர் ரவீந்திரன்


Comments