மறைந்த
சிவச்சந்திரதேவன் அவர்கள் மிகவும் சொற்ப காலத்தில் எனக்கு அறிமுகமானவர். அன்னார் உருவாக்கிய சுருக்கெழுத்து, தட்டச்சுப் பயிற்சி நிலையத்தில் பயின்றோர் இன்று நாட்டின் பல பாகங்களிலும் அரச
மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் சேவையாற்றுகின்றனர். அவர் என்னைக் காணும்போதெல்லாம்
நாட்டின் நிலைமை பற்றியும் இக்கால இளைஞர் யுவதிகள் பற்றியும் மிகவும் கவலையுடன் கலந்துரையாடுவார். தானும் தன்பாடும் என்ற வகையில் தன்னடக்க
சுபாவங்கொண்ட அவர் எனக்கு நல்ல
பல அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் ஒரு சகோதரன் போன்று
வழங்கியிருக்கின்றார். அவரின் திடீர் மரணம் எல்லோரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கின்றது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அவருடைய குடும்பத்தவருடன் இணைந்து இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
திருமதி
முஷ்பிகா முன்தஸிர்
முன்னாள்
ஹன்சாட் பிரதிப் பதிப்பாசிரியர்,
இலங்கைப்
பாராளுமன்றம்.
Comments
Post a Comment