முத்துச் சிதறாய் சீர்பொழியும் இந்துமா கடலின் மத்தியிலே இலங்கைத் தீவின் முனையதுவாம் வடமராட்சியிலே நல்வித்துக்கள் தோன்றிய புலோலி, புற்றளைப் பகுதியிலே பண்டிதர் பரம்பரையிலே தோன்றிய முதல் வித்தகராக, கலைகளிலே வல்லவனாகத் திகழ்ந்தீர்!பிறந்த மண்ணிலே மக்கள் வங்கி பிரதம ஆலோசகராகவும் அதேசமயம் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தின் ஸ்தாபகராகவும் உமக்கென்று ஓரிடம் பதித்தீர்!சின்னச்சின்னக் குறும்புகள் செய்வதிலும் கூடிக்கலந்து சிந்தனையில் தீதின்றி பலரும் சிரிக்க கதைபேசுவீர். உதவிக்கு ஆலோசனை கேட்டால் உதவியே புரிந்திடுவீர்!23.05.2020அன்று எம் சக உத்தியோகத்தரான உமது பாரியாரின் தொலைபேசி அழைப்பில் அவரின் அழுகுரலுடன் நித்திரையில் அமைதியாக உமது உயிர் பிரிந்த அவலச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.உமது மறைவையிட்டு தவித்து நிற்கும் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுகின்றேன்.திருமதி செ. சரஸ்வதிஅபிவிருத்தி உத்தியோகத்தர்,இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்,கொழும்பு.
யாதுமான அப்பாவுக்கு...
Comments
Post a Comment