நினைத்துப் பார்க்கின்றேன், என் பழைய நினைவுகளை மீட்டிப் பார்க்கின்றேன்.
என்
கடமையின் நாட்களை எண்ணிப் பார்க்கின்றேன், மொட்டுக்கள் போன்ற அந்த மழலைகளைத் தேடிப்
பார்க்கின்றேன்.
காலங்கள்
கடந்து போயின....
சின்னஞ்சிறு
பாலர் நாம் துரிதமுடன்
அள்ளிமலர்
வீசி ஆனந்தமாய்
சின்னஞ்சிறு
அடிகள் எடுத்துவைத்தே
சிங்காரமாய்
ஆடிடுவோம்.
சின்னச்சின்ன...
சிறார்கள்
இன்பமான
நினைவுகள்.
இப்படியான
காலகட்டத்தில் வாணியின் குடும்பத்தோடு எனக்கு நல்லுறவு இருந்தது. வாணி, "அக்கா அக்கா" என்று கூப்பிட்ட அந்த நாட்களும் பிள்ளையைப்போல
என்னை உபசரித்த அவரது அம்மாவையும் நான் மறந்துவிடவில்லை. தாயார்
என்னுடன் மனம் விட்டுப் பேசுவார்.
இப்படியாக
அங்கு சென்ற நாட்களில் மட்டுமல்ல, ஒரு பாலர் பாடசாலை
ஆசிரியராக இருந்தபோதும் திரு. சிவச்சந்திரதேவன் அவர்களுடன் பேச வாய்ப்புக்கள் கிட்டின.
குறிப்பாக சொல்லப்போனால் அவரிடத்தில் அன்பும், பண்பும், ஆதரவும், பொறுமையும், இன்முகமும் இருக்கக் கண்டேன்.
அவர்
மறைந்த செய்தி கேட்டதும் மனமுடைந்தேன். நிச்சயமாகவே பேரிழப்புத்தான்‚ ஆனாலும் அவர் போட்ட விதைகள்
மரங்களாக எழும்பி கனிகளைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
பிள்ளைகளே
அவரின் வாஞ்சைகளை நிறைவேற்றுங்கள்!
நன்றி!
God
Bless You!
திருமதி
எஸ்.செல்வராணி
முன்னாள்
பாலர் பாடசாலை ஆசிரியை,
தென்னிந்திய
திருச்சபைஇ உடுப்பிட்டி.
(தற்போது
சுவிஸ்லாந்து)
Comments
Post a Comment