Skip to main content

ஆத்ம சிவப்பிராப்திக்குப் பிரார்த்தனை செய்கிறோம்

யாழ்ப்பாணம், புலோலி, புற்றளையைப் பிறப்பிடமாகவும் உடுப்பிட்டி, கொழும்பை வசிப்பிடமாகவூம் கொண்ட மதிப்பார்ந்த அமரர் க.வ. சிவச்சந்திரதேவன் அவர்களின் இறைபத செய்தியறிந்து மிகவும் கவலையுற்றோம்.

நல்ல நினைவுகள் வாழ்வைக் கொடுக்கும், தீய நினைவுகள் வாழ்வைக் கெடுக்கும். நல்ல உடல் - நல்ல மனம் - நல்ல வாழ்வு என்பதுதான் உயர்ந்தோர் வாழ்க்கை முறை. நடுவுநிலைமை என்கின்ற செந்தண்மையை சீரழிக்கின்ற ஒரு சிறுநினைவு தீப்பொறியாக மாறி தீப்புயலாக எரிக்கும் ஆற்றல் கொண்டதால் அந்த நினைவுவந்தோரின் உடல் வடிவு அழியும், எழில் உரு, அழியும், அவர் குணம் கழியும், பொருள் அழியும், தொடரும் வினை அழியும். ஆகவே, சிந்தை  கெடாமல் வாழ வேண்டும். செயல்களை ஆற்றவேண்டும். மனம் தான் உடலைக் காக்கிறது. உடல்தான் மனதைக் காக்கிறது. ஆகவே, மனம் மாறுகின்றபோது உடல்நிலையும் உயிர்நிலையும் வாழ்வுநிலையும் மாறி அழிந்து போகிறது என்ற உளவியல் கருத்தை வள்ளுவப் பெருந்தகை எடுத்துரைக்கிறார்.

பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன் மக்களாவர். அந்த வகையில் அமரர் அவர்கள் சுருக்கெழுத்து-தட்டச்சுத் துறையில் பல்வேறு பரிணாமங்களைக் காண்பித்த பெருமகனாவார். அத்தோடு நின்றுவிடாமல் இத்துறை சார்ந்த அனைவரையும் ஒன்றிணைத்த பெருமை இவரையே சாரும். பிறருக்குப் பயனுள்ள வகையில் நம் வாழ்வை அமைத்து வாழ்வது நம்மில் சிலரே. அந்தகையில் பெருமகனாரின் சேவை பூவுலகமுள்ளவரை மறையாது. இன்று நம்மிடம் இல்லாமல் சிவலோகத்தில் இருக்கும் புண்ணிய ஆத்மா பரம்பொருளின் பாதக் கமலத்தைச் சென்றுசேர நாம் அமரரது இழப்பினால் துயரமடைந்துள்ள உறவுகளுக்கு எமது ஆறதலைப் பகிர்ந்து கொள்கின்றோம். 

சிவஸ்ரீ கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள்
தலைவர்,
இந்துக்குருமார் அமைப்பு.

Comments