எனது உளம் நிறைந்த நண்பர் திரு.வ.சிவச்சந்திரதேவனின் நினைவுகளை நினைவுமலரில் பதியும் துர்ப்பாக்கிய நிலையில், நிறைந்த கண்ணீருடன் தொடர்கிறேன். 46 ஆண்டுகால நட்பு இமைப்பொழுதில் தேவன் தேவனுடன் தேவனாகிவிட்டார். 1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்தொழில்நுட்ப நிறுவனத்தில் பயிற்சிக்காக அனுமதிபெற்ற பசுமையான நாளை எண்ணிப் பார்க்கிறேன். எமது வகுப்பில் 40 சகோதர சகோதரிகளின் புதுமுக அறிமுகம் கிடைத்தநாள். எமது வகுப்பில் அழகு, ஆற்றல், பண்பு, கருணை, இரக்கம் மிகு தேவன் நட்புரிமை ஆரம்பித்த நாள். இன்றுவரை நிலைத்து நீடித்த உறவு. எனது வாழ்வின் இன்ப துன்பங்களில் முதல் ஆளாக தோள்கொடுத்த தேவன் இறை யுலகில் இறை கடமைக்காகச் சென்றுவிட்டார் என மனதை ஆற்றுப்படுத்த முயல்கிறேன், முடியவில்லை.
தேவன்
ஏற்கெனவே பல்தொழில்நுட்பக் கல்லூரியில் ‘ஈழத்து சுருக்கெழுத்துத் தந்தை”
எனப் பூசிக்கப்பட்ட பேராசான் இராமலிங்கம் அவர்களின்
அன்பிற்கும் விசுவாசத்திற்கும் உரிய முதல் மாணவன்.
தேவன் முறையாக தமிழ், ஆங்கில சுருக்கெழுத்து, தட்டச்சுத் துறையில் துறைபோனவராக, ஐயம் திரிபறக் கற்றுத்
தேறிய விற்பன்னராக விளங்கியதால் எங்கள் 40 நண்பர்களில் முதல்முறையாக அன்று பெருமைக்குரிய வங்கிச் சேவை தேவனுக்குக் கிடைத்தது.
மக்கள் மனம் நிறைந்த மக்கள்
வங்கியில் பணிக்காக பணிவுடன் சேர்ந்தார். முதல் உத்தியோகம்; கிடைத்த தேவன் எங்களுக்கு நல்லதொரு தேநீர் விருந்து தந்து மகிழ்வித்ததோடு, தேனிலும் இனிமையாக நம் எல்லோரது மனதை
யும் நிறைத்த நல்லதோர் இன்னுரையையும் ஆற்றி மகிழ்ந்தார். அவரது அன்றைய பொருள் பொதிந்த நல்லுரை எல்லோர் மனதிலும் ஆழப்பதிந்தது.
கிழக்கு
மாகாணத்தில் கல்முனை, சம்மாந்துறை, வாழைச் சேனை, நிந்தவூர் ஆகிய இடங்களில்
கடமையாற்றிதோடு, வங்கியின் மேன்மைக்கும் வாடிக்கையாளரின் தேவைக்கும் அயராது பாடுபட்டார். வங்கி
முகாமையாளர், சக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள்
அனைவருக்கும் இடமறிந்து, காலமறிந்து தேவையறிந்து கை கொடுப்பதில் தேவனுக்கு
நிகர் தேவனே‚ வங்கித் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் பயனுள்ள பணிகளால் பெருமை பெற்றார். அதனால் அங்கத்தவர்கள் தம் அங்கத்துவ உரிமைகளை
வென்றெடுத்தனர். வங்கி விழாக்களைத் திட்டமிடுவது, ஒழுங்கு செய்வது, உரியமுறையில் நிறைவாக நடாத்துவது இவருக்குக் கைவந்த கலை. எம்மையும் நல்ல
நிகழ்வுகளுக்கு அழைத்து பெருமைப்படுத்தி மகிழ்ந்தவர்.
கிழக்கு
மாகாணத்தில் இவர் சேவைசெய்த காலத்தில்
1978களில் பெரும் சூறாவளி, வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது. அவ்வேளை அல்லற்பட்டவர்களுக்கு அர்ப்பணிப்புடன் ஒரு தொண்டனாக நின்று
தேவன் செய்த சேவைகள்
பற்றி மற்றவர்கள் கூறக்கேட்டு வியந்தோம். தற்போது போன்று நவீன தொடர்பு சாதன
வசதி இல்லாத காலம். புயல் ஓய்ந்ததும் தேவனின் விபரமான கடிதம், அன்று
கிழக்கிலங்கையில் பிற்பகல் 3.00 மணியளவில் சூறாவளி ஆரம்பித்தது முதல் ஏற்பட்ட அவலங்கள், அனர்த்தங்கள் அனைத்தையும் தத்ரூபமாக கடிதத்தில் கண்முன்னே கொண்டுவந்தார். எச்செயலையும் முழுமையாக, நிறைவாகச் செய்வது இவர் பண்பு. இவரது
மிக உச்சமான பண்பு, யார்
அழைப்பு அனுப்பினாலும் அதை மதித்து கட்டாயம்
நிகழ்வில் கலந்து சிறப்பிப்பார். பத்திரிகைகள் வாயிலாக நண்பர்களின் பரீட்சைப் பெறுபேறுகள், பதவியுயர்வுகள், குடும்ப நிகழ்வுகள் என்பவற்றை அறிந்தும் மகிழ்வோடு வாழ்த்தி கடிதம் வரைந்து எல்லோரையும் பெருமைப்படுத்துவார்.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மாற்றலாகிவந்து, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை வங்கிகளில் கடமையாற்றி பதவியுயர்வோடு யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் சிறப்புப் பணியாற்றி பலரது பாராட்டை யும் பெற்று சேவையில் நிறைவுகண்டு ஓய்வுபெற்றார்.
கல்வியில்
சாதனைகள் பல புரியும் வடமராட்சி
மண்ணில் ‘வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம்” நிறுவி பெரியார்களது ஆசியோடும் தனது அர்ப்பணிப்பான கடமையோடும்
அந்நிறுவனம் வெள்ளிவிழாக் காணச் செய்தார். G. C. E. (O/L) சித்தியடைந்த மாணவர்களை இந்நிறுவனத்தில் இணைத்து இலவசமாக சுருக்கெழுத்து, தட்டச்சுப் பாடத்தைப் போதித்தார். பலர் தொடர்ந்து கற்றனர்.
இலங்கையில் வேலையில்லாப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருந்த வேளையில் தொழிற் சந்தையில் சுருக் கெழுத்தாளர், தட்டெழுத்தாளர்களுக்கு
அதிக கிறாக்கி இருந்தது. இதனால் தேவனின் மாணவர்கள் அரச திணைக்களங்களில் சுருக்
கெழுத்தாளர்களாக, தட்டெழுத்தாளர்களாகப் பதவிகளை வகித்தனர். இன்று கணினிபெறும் முக்கியத்துவத்தை அன்று தட்டெழுத்து வகித்தது. நீதிமன்றங்களில் மாண்புமிகு நீதிபதிகளோடு சரி ஆசனத்தில் இருந்து
சுருக்கெழுத்தாளராகஇ தட்டெழுத்தாளராகக் கடமைபுரியச் செய்தவர் எங்கள் தேவன். பலர் வாழ்வு மலர
பணியாற்றிய எம் தேவனை என்றும்
மறவோம்.
இல்லற
வாழ்வையும் இனிதே ஆற்றி குடும்பத்தை கோயிலாகப் போற்றி வாழ்ந்தவர். அவரது அன்பும் ஆசி யும் அவரது குடும்பத்தாரின் எதிர்கால வாழ்வுக்கு என்றும்
துணைநிற்கும். தேவனின் மகிமைகளை தேவன் பெற்ற
புத்திரச் செல்வங்கள் மேலும் மேன்மைப் படுத்துவர்;.
ஆ.ஸ்ரீஸ்கந்தமூர்த்தி
முன்னாள்
அதிபர்,
கோப்பாய்
ஆசிரிய பயிற்சிக் கலாசாலை,
யாழ்ப்பாணம்.
Comments
Post a Comment