நண்பனின்
தகப்பன் என்றால் - வில்லன் போல
பழகும் உறவுகளில் நீங்கள் நல்ல நண்பனாக பழகினீர்கள்...
தமிழ் சார்ந்த நிகழ்வுகளில் தமிழைப் போல்
தங்கள் வரவும் இன்றியமையாதது அப்பா...
இனி நிகழ்வுகளில் எல்லாம் உம் போன்ற
தமிழ் விரும்பியை எங்கு காண்பேன்...
பார்க்கும் இடமெல்லாம் பகிடியாய் கதைக்காமல் சென்றதில்லை...
பம்பரமாய் வெள்ளவத்தையை வலம் வராத நாளும்
இல்லை...
இனி மீளத்திரும்பும் வழமையான நாட்களில்
எங்கு காண்பேன் அப்பா உங்களை....
அருகி வருகின்ற சுருக்கெழுத்தை
மிக நன்கு கற்றறிந்தவர் அப்பா நீங்கள்...
அருகி வரும் வாசிப்பிலும் தங்களின் ஈடுபாடு எல்லையற்றது...
தன் மகனை சான்றோன் என
கேட்ட தந்தை...
அப்பா இந்த மரணம் உங்கள்
உடலுக்கும் உயிருக்குமே அன்றி உங்களுக்கு இல்லை...
நீங்கள் இந்த உலகத்தில் விதைத்த
நல்ல விதைகள் அனைத்தும் வாழும் வரை
அப்பா நீங்கள் மதிப்பிற்குரிய
சிவச்சந்திரதேவனாக என்றும் வாழ்வீர்கள்...
இறுதி தருணங்களில்கூட உங்களை பார்க்கமுடியவில்லை...
இனி உங்கள் நையாண்டி கதைகளை கேட்க முடியாது என
சிந்திக்கும் போதெல்லாம் வேதனையாக இருக்கிறது....
எத்தனை நிஜங்கள் சொன்னாலும்
இனி நீங்கள் நினைவுகள் எனும் போது
வார்த்தைகள் அற்ற கண்ணீர் எனதாகின்றது...
அன்பு பல செய்த ஆத்மா
சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
தனுஷா இராஜேந்திரம்
Comments
Post a Comment