Skip to main content

எங்கள் வழிகாட்டி - சுஜாதா வரதகுமார்

உயர்தரக் கல்வியை முடித்து பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத விடத்து அடுத்த கட்டமாக என்ன செய்வதென்று சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் எமது ஊரிலேயே தொழிற்கல்வியாக  சுருக்கெழுத்து - தட்டச்சு வகுப்பினை தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் பயில்வதற்கு வகுப்புக்களை தனது கண்டிப்புடனான மேற்பார்வையுடன் சிறந்தமுறையில் கற்பிப்பதற்குரிய ஒழுங்குகளை மேற்கொண்டு, பாடநெறிப் பூர்த்தியின் பின்னர் சான்றிதழ் வழங்கி, தொடர் நடவடிக்கையாக கரவெட்டிப் பிரதேச செயலகத்தில் 6 மாத காலங்கள் பயிற்சிபெற வைத்ததன்மூலம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தில் ஆங்கிலச் சுருக்கெழுத்தாளர் பதவியைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்ற முறையில் பயிற்சி வழங்கி,  தொடர்ந்து வட- கிழக்கு மாகாண சபை  மற்றும் மத்திய அரசு நிறுவனங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்ட வேளையில், உரிய முறையில் விண்ணப்பிப்பதற்குரிய ஆலோசனை வழங்கி, விண்ணப்பித்த நாளிலிருந்தே பரீட்சையை எதிர்நோக்கும் வகையில் வேகப் பயிற்சி வழங்கி, பரீட்சையில் சித்திபெற வைத்து, ஆங்கில சுருக்கெழுத்தாளராக நியமனம் பெற்று, இன்றுவரை எமது கடமையைச் சிறப்புற மேற் கொள்ள வழிவகுத்த எங்களின் ஆசானின் மறைவுச் செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்ததுடன், அவரது இழப்பினால் ஆறாத்துயரில் ஆழ்ந்திருக்கும் அவரின் மனைவி,  பிள்ளைகளுக்கு எமது ஆறுதலைத் தெரிவிப்பதுடன்,  அவரின் ஆத்மசாந்திக்கும் பிரார்த்திக்கின்றோம்.

சுஜாதா வரதகுமார்
முகாமைத்துவ உதவியாளர்,
மாகாண கல்வித் திணைக்களம்,
கிழக்கு மாகாணம்.


Comments