ஆரம்பத்தில் அவருக்கு நான் அறிமுகம் அவரின் மனைவியின் அலுவலக சகபாடியாகத்தான். தொடர்ந்த நேருக்குநேர் சந்திப்புக் களும் தொலைபேசித் தொடர்புகளும் அண்ணன் - தங்கை உறவை உணர வைத்தது.
பல்துறை
ஆளுமையாளன், படபடவென்று பேசினாலும் பண்பான பேச்சு, கண்ணியமான வாழ்க்கை, கள்ளங்கபடமற்ற மனம் இதையெல்லாம் உணர்த்துகின்றது
அவரது இறுதி நித்திரை.
பாயிலே
படுக்காமல், நோயினால் பதைக்காமல், "இது எப்ப போகும்" என்று மற்றவர் வெறுக்காமல், சித்தர்கள், யோகிகள் போல் ஜீவசமாதியாய் உங்கள்
ஆவி அடங்கியவுடன் பார்த்தவர்களுள் நானும் ஒருத்தி. இறந்துவிட்டீர்கள் என்பதை ஜீரணிக்க முடியாத மனைவியும், வாய்விட்டு அழக்கூட முடியாத சூழலில் மக்களும், குடும்பத்தில் உடனடியாக வந்த அடுத்த இடியைத்
தாங்கமுடியாத மைத்துனிகளின் பரிதவிப்பும் இணைந்த சூழலில் உயிரற்ற உங்கள் உடலைத் தரிசித்தேன்.
"இவர்
போட்டார்" என்ற தொலைபேசியூடான
கிருஷ்ணாக்காவின் கதறல், நேற்றும் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டாரே என்ற ஏக்கத்தையே தந்தது.
பிறந்தவர் அனைவரும் இறப்பது நிஜம். ஆனால் அண்ணையின் இழப்பு என்னால் ஜீரணிக்க முடியாதுள்ளது. தமிழ்ச் சங்கம் போனாலும் அவர் நினைப்புத்தான் வருகிறது.
சங்கரப்பிள்ளை மண்டபத்திற்குள் ஆரம்பமாகிய எமது உரையாடல் மண்டபத்திற்கு
வெளியே, பிரதான வாயில் மற்றும் வெளியே எனத் தொடர்ந்த நாட்களை
மறக்க முடியவில்லை. நான் பேசுவதற்கு நல்ல
விடயங்கள் உள்ளடங்கியது என்றுசொல்லி ஒரு கும்பாபிஷேக மலரைப் பக்குவமாக இரண்டு பை போட்டு சுற்றி
அலுவலகத்திற்குத் தேடிவந்து தந்த அந்த அன்பை
மறக்கமுடியாதுள்ளது. நான் நல்ல ஒரு
சகோதரனை இழந்துவிட்டேன். அண்ணனின் ஆத்மா சாந்திக்காகப் பிரார்த்திக்கும் தங்கை.
பவானி
முகுந்தன்
அபிவிருத்தி
உத்தியோகத்தர்,
இந்து
சமய கலாசார அலுவலர்கள் திணைக்களம்.
Comments
Post a Comment