சொய்சாபுர பகுதியை வதிவிடமாகக் கொண்ட எமது அன்புக்குரிய அமரர் வயிரவிப்பிள்ளை சிவச்சந்திரதேவன் அவர்களின் மறைவு குறித்து மிகவும் கவலையடைகின்றோம்.
“நெருநல்
உளன் ஒருவன் இன்றில்லை
என்னும்
பெருமையுடைத்து இவ்வுலகு"
என்ற
வள்ளுவர் வாக்கினை மெய்ப்பித்தமை போல் அன்னாரது பிரிவையும்
கருதவேண்டியுள்ளது. அமரர் வயிரவிப்பிள்ளை சிவச்சந்திரதேவன் அவர்கள் தமது இளமைக்காலத்தை மக்கள்
வங்கிச் சேவையிலும் தட்டெழுத்து, சுருக்கெழுத்து போன்ற விசேட துறைசார் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி அர்ப்பணிப்புடன் கூடிய சமூகப் பணியை செவ்வனே நிறைவேற்றியுள்ளார். அதுமட்டு மன்றி அன்னார் சமய, கலாசார விடயங்களிலும்
தன்னாலான பங்களிப்புக்களைச் செய்து வந்ததோடு, நேரான சிந்தனையுடன் அவ்வப்போது பொருத்தமான
ஆலோசனை வழிகாட்டல்களையும் வழங்கி இப்பிரதேசவாசிகளின் முன்னேற்றத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ஒரு பெருந்தகை என்றால்
அது மிகையாகாது.
"தோன்றின்
புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின்
தோன்றாமை நன்று"
என்ற
குறளுக்கமைய முன்மாதிரியாக அன்னார் வாழ்ந்து காட்டியுள்ளார் என்பதை நினைந்து எமது இதயங்களைத் தேற்றிக்கொள்வதுடன், அன்னாரின் பிரிவால் துயருறும் அவரின் குடும்பத்தாருக்கும் ஏனைய சொந்தங்களுக்கும் எமது
ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல பரம்பொருளின்
பாதாரவிந்தங்களை அடைய வேண்டிப்
பிரார்த்தித்து அமைகின்றோம்.
பிரம்மஸ்ரீ
க. இரமணீகரசர்மா (அதிபர்)
குடும்பத்தினர்,
M 1/11, சொய்சாபுர தொடர்மாடி,
மொறட்டுவை.
Comments
Post a Comment