Skip to main content

ஆசானின் நினைவுகள் - பிறேமா நந்தகுமாரன்

அமரர் திரு...சிவச்சந்திரதேவன் அவர்கள் கரவெட்டி, வதிரியில் அமைந்துள்ள வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தில் செயலாள ராகப் பணியாற்றினார். அச்சுருக்கெழுத்து நிறுவனத்தில் கல்விகற்கச் சென்றபோது அறிமுகமானவர். என்னைப்போன்ற பல அரச ஊழியர்கள் உருவாக உறுதுணையாய் அமைந்த ஆசானாவார். அனைவரிடத்திலும் அன்புடனும் பண்புடனும் பழகக்கூடியவர். உதவிவேண்டி வருவோருக்கு சலிக்காது உதவி செய்யக்கூடிய நல்லமனிதர். ஜனனம், மரணம் என்பவை மனித வாழ்வின் நியதி. அவரின் மரணம் ஒரு பேரிழப்பே. ஞாலம் தனிலிருந்து அவர் விடைபெற்றாலும் காலமெல்லாம் அவர் ஆற்றிய சேவைகள் நிலைக்கும். அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அவரின் ஆத்மா இறைவனடி சேரப்  பிரார்த்திக்கிறேன்.

திருமதி பிறேமா நந்தகுமாரன்
முகாமைத்துவ உதவியாளர்,
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்.


Comments