ஆறு வருடங்களாக, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளராகச் சிறந்த சேவையாற்றிவரும் திருமதி. கிருஷ்ணகுமாரி சிவச்சந்திரதேவன் அவர்களின், கணவரது இழப்பாற் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கு எல்லாம் வல்ல இறைவன் வல்லமைதரப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். அன்னார் பற்றிய சில தகவல்களை நினைவுப் பகிர்வாக பகிர்ந்து கொள்கின்றேன்.
அமரர்
வ.சிவச்சந்திரதேவன் அவர்கள், புலோலி, புற்றளையைப் பிறப்பிடமாகக் கொண்டார். மூன்றாம் வகுப்பு வரை யா/ புற்றளை
சாரதா வித்தியாலயத்திற் (தற்போது புற்றளை மகா வித்தியாலயம்) கற்றவர்.
நான்காம் வகுப்பு மட்டும் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிற் கற்றுக் கொண்டார். ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கண்டியிலும் பின்பு
க.பொ.த.(சா/த)
வரை கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் பின்பு நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திலும் பயின்றார்.
பருத்தித்துறை
வீதியால் நான்காம் வகுப்புக் கற்க, யா/ ஹாட்லிக் கல்லூரி
சென்று வந்த காலத்தில்இ ஒன்பது
வயதில் அவருக்குட் கனவுகள் சில துளிர்விட்டன. இலங்கை
வங்கிக்கு வேலைக்கு ஆட்கள் தேவை என்றும் வேலை
நேரம் 8.30 தொடக்கம் 1.30 வரை என்று போடப்பட்ட
விளம்பரத்தைக் கண்டார். "அடடா‚ வங்கி வேலை இவ்வளவு குறுகிய
நேர வேலையா?" என்று எண்ணி, எதிர்காலத்திற் தனக்கும் அந்த வேலை கிடைத்தால்
நல்லது என்று நினைத்துக்கொண்டார். அப்படியே அதைத் தாண்டிப் பருத்தித்துறை வர்த்தகக் கல்லூரியைத் தாண்டும்போது "டக் டக்" என்ற
தட்டச்சுச் சத்தங் சகட்கும். நாமும் ஒருநாள் உந்த இடத்திலிருந்து "டக்
டக்" அடிக்கவேண்டும் என்று போகும் போதும் வரும்போதும் நினைத்தார். பின்பு அந்த விடயங்கள் படிக்குங்
காலத்தில் மறந்தே போய்விட்டார் என்று, அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு
அளித்த பேட்டியிற் தெரிவித்திருந்தார். உண்மையில் இளவயதில் விதைக்கப்படும் நல்ல கனவுகள் விஸ்வரூபம்
பெறும் என்பதற்கு இவர் வாழ்வு நல்லதோர்
உதாரணம்.
ஏறத்தாழ
எழுபத்தைந்து நேர்முகத் தேர்வுகளுக்கு முகங்கொடுத்தார். அவரது வேலைக்கான தேடற் பயைத்திற் தரிப்பிடங் கொடுத்தது சம்மாந்துறை மக்கள் வங்கி. 1978 ஆம் ஆண்டு அங்கு
அவர் சுருக்கெழுத்தாளராகப் பணியாற்றினார். தன் ஊரவர்களுக்குச் சுருக்கெழுத்துப்
பயிற்சி இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்பதில் அரும்பாடுபட்டு அதில் வெற்றியுங்கண்டார்.
மக்கள்
வங்கியின் பல கிளைகளுக்கும் மாற்றலாகி
2006 வரை திறம்படப் பணிபுரிந்தார். 1995 இல் அவரது சேவையின்
நம்பகத் தன்மை மற்றும் வினையாற்றுகையின் காரைமாக யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் அந்தரங்கச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றார்.
2006 இல் ஓய்வெடுக்கும் வரை உயரதிகாரிகள் மட்டத்தில்
நம்பிக்கைக்குரிய அதிகாரியாகத் திறம்படப் பணிபுரிந்தார்.
அவரது
சேவை மனப்பாங்கு நிச்சயம் அவரது குடும்பத்தாருக்கு நன்மையை அள்ளித்தரும் என்பதில் ஐயமில்லை. எல்லோர்க்கும் நலமே உண்டாக இறைவனைப்
பிரார்த்திக்கின்றேன்.
அ.உமாமகேஸ்வரன்
பணிப்பாளர்,
இந்து
சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்.
Comments
Post a Comment