"அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு", மண்ணில் பிறந்தவர்கள் என்றோ ஒரு நாள் விண்ணுலகம் அடைவர் என்பது நியதி. ஒருவர் மண்ணில் பிறந்த நாள்முதல் இறையடி சேரும்வரை அவர் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்பது முக்கியமல்லஇ அவர் எப்படி வாழ்ந்தார், தான் பிறந்த மண்ணுக்கு என்ன சாதித்தார் என்பதுதான் முக்கியம். அந்த வகையில் அமரத்துவம் அடைந்தவர் நண்பர் சிவச்சந்திரதேவன் அவர்கள்.
"பணிவுடையன்
இன்சொலான் ஆதல் ஒருவற்கு
அணியல்ல
மற்றுப்பிறர்"
எனும்
கூற்றுக்கு இணங்கஇ இனியமுகம், அறிவொளிக்கேற்ற
கண்கள், கணீரென்ற குரலோசை, மானிடத்தின் நேயம், சுயநலமற்ற பொதுநலம் போன்ற இன்னோரன்ன பண்புகளைத் தமக்கு அணிகலனாகக்கொண்டு செயற்பட்ட ஒரு செம்மல் என்றுதான்
சொல்ல வேண்டும்.
மேலும் வாழ்க்கை என்பது
மிகவும் எளிமையானது, உண்மையானது என்ற தத்துவங்களைத் தனது
செயல் மூலம் மற்றவர்களுக்கு எடுத்தியம்பியவர்.
வடமராட்சி
சுருக்கெழுத்துக் கழகத்தை ஆரம்பித்து, அதன்மூலம் எத்தனையோ மாணவர்களின் வாழ்க்கைப் பயணத்திற்கு ஒளியூட்டிய ஒரு பெருந்தகையை நாம்
இழந்து நிற்கின்றோம்.
கொழும்பு
மாநகரில் அவரது துணைவியார் கிருஷ்ணகுமாரியுடன் வேலை செய்த காலத்தில்
அவரோடு பழகிய நாட்களை நான் நினைத்துப் பார்க்கின்றேன்.
பக்குவமாகக்
கதைசொல்லி, பாங்காக அன்பு சொரிந்துஇ அற்புதமாக நட்பை வளர்த்த அண்ணரின் கண் இமைக்கும் நேரத்தில்
முகநூலில் வந்த செய்தி கொஞ்சம்
தடுமாற வைத்ததுதான் உண்மை.
ஒரு
வங்கியாளனாக இருந்தும் இலக்கியம், சமயம் என்பவற்றில் ஆர்வம் கொண்டு அதனை தனது பிள்ளைகளுக்கும், சமூகத்திற்கும் ஊட்டி வளர்த்த உத்தமர் என்றால் மிகையாகாது.
அந்த
வகையில் சான்றோர்களின் வாழ்வு சொற்ப காலம். இது வரலாறு சொல்லும்
பாடம். "அரிது அரிது மானிடராதல் அரிது" என்றார் ஒளவை மூதாட்டி. ஆம், உயர்ந்த பிறப்பு மனிதப் பிறப்பு. மனிதப் பிறப்பில் வாழும்
காலத்தில் தனது நோயையும் பொருட்படுத்தாது பிறர் மதிக்க, ஊர் போற்ற வாழும்
மனிதனுக்கு அவனது செயல்களே அவனது பிறப்புக்குச் சிறப்புத் தருவதென்றால்
மிகையாகாது.
"பிறர்
வாழத் தான் வாழும் மனிதன்
எப்போதும் வையத்துள் வைக்கப்படுவான்" என்ற பொய்யாமொழிப் புலவரின்
கூற்றுக்கு இணங்க, வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்.
அவர் இன்று எம்முடன் இல்லையாயினும் அவர் விட்டுச்சென்ற பணிகள்
அவரது குடும்பத்தினரை வாழ்விக்கும். இறப்பு
என்பது முடிந்த முடிவல்ல. வாழ்வியல் பாதையில் அடுத்த கட்டம். நிச்சயம் அவரின் கனவுகளை அவரின் பிள்ளைகள்
நிறைவேற்றுவார்கள் என்பது திண்ணம்‚ சத்தியம் என்றும் தோற்றதில்லை. அவர் பிரிவால் வாடும்
மழலைச் செல்வங்கள் தலை நிமிர்ந்து வாழ
அவரின் ஆசீர்வாதம் என்றென்றும் கிடைக்க வேண்டுமென்றும் எல்லாம் வல்ல அவன் அருளை
வேண்டுகின்றேன்.
Comments
Post a Comment