சிரித்த முகமும் சினக்காத வார்த்தையும் எவரெவர் என்று சிந்தனை கொள்ளாது உதவும் பண்பும் கொண்டவரே‚ வந்தோரை வா என இருகரம் நீட்டி வரவேற்று உபசரித்து வழியனுப்பும் உத்தமரே‚ ஐயகோ‚ அக்காலனிற்கே பொறுக்கவில்லை. எம்மை வேரற்ற மரம் போல சாய்த்துவிட்டாரே. அந்நாளை எப்படி மறப்பேன்‚ உங்கள் பிரிவை எம்மால் ஒரு கணப்பொழுதேனும் தாங்கமுடிய வில்லையே‚ என்செய்வோம்‚ பிறப்பும் இறப்பும் நிச்சயம் ஆனது. அதையேற்று சென்றுவிட்டீர். இன்றைய சூழ்நிலை உன்புகழ் பாட எமக்குக் கிடைக்கவில்லையே‚ நன்றே மதிக்கும் நல்ல மானிடமாய் இவ்வுலகைவிட்டு தரிசித்துச் சென்றுவிட்டீர். எத்தனையோ குடும்பங்களின் கண்ணீர் துடைத்த உத்தமரே‚ எம் உயிர்மூச்சு உள்ளவரை எம் குடும்பத்திற்கு ஒளி தந்தீரே‚ உமது ஆத்மா நித்திய ஆறுதல் பெற இறைவனை இறைஞ்சி நிறைவு செய்கின்றேன்.
நாகேஸ்வரன்
கலீன்
இலங்கை
வங்கி,
சாவகச்சேரி.
Comments
Post a Comment