ஐயம் அறவே தட்டச்சு அதனில் ஆழ்ந்து மூழ்கி ஆராய்ந்து மெய்யைக் கொணர்ந்து மாணவர்க்கெல்லாம் இடித்துரைத்த வையகம் காணா சுருக்கெழுத்தாளன் இராமலிங்கனார் வழிநின்ற தெய்வ ஞான தீபமெனத் திகழ்ந்த யோகி சிவச்சந்திரதேவன் பேரின்ப வாழ்வு கண்டு மறைந்தனனே!
மக்கள் வங்கி முழுவதும் பெரும் புகழ் உடையான். அனைத்து அரச, அரச சார்பற்ற திணைக்களங்களில் வேலைபார்க்கும் தட்டெழுத்தாளர்கள், சுருக்கெழுத்தாளர்கள் தலைவளைத்து வணங்கும் ஒரு குருதேவன். எமையெல்லாம் கைவிட்டு ஐயோ‚ மலைவிளக்கு மறைந்ததென மறைந்திட்டான், என்னே இம் மனித வாழ்க்கை!
ஓரும் அவதானம் ஒரு நூறு செய்திந்தப் பாரில்
புகழ் படைந்த சுருக்கெழுத்து ஆசான் - சீரிய
செந்தமிழால் ஆங்கிலத்தால் பயிற்சி மிக்க தேவன்குரு
நண்பனை எந்தநாள் காண்பேன் இனி‚
தேடித் தேடிப் பிள்ளைகள் அழ, திகைத்துத் திகைத்து மனைவி சோர்ந்துவிழ, வாடி வாடி உற்றார் உறவினர்கள் வற்றாக் கண்ணீர் வடித்து அலற, ஈடும் எடுப்பும் இல்லாத ஏகதேவன் சேர் என்று இம்மாநிலம் புகழ் சிவச்சந்திரதேவன் நண்பன் எம்மைவிட்டுப் பிரிந்தனனே‚ பயிற்சி மிக்க பண்புடையோன், தேங்கி அன்பு கனிந் தொழுக, அண்மையில் தள்ளம் தெளிந்த மொழியதனில் பேசினனே தொலைபேசியில். உலகையும் நீத்துச் சென்றனனே! விண்ணுலகம் சென்றான் விரைந்து!
T .T . ஜெகநாதன்
ஓய்வூநிலை மக்கள் வங்கி பிரதி முகாமையாளர்,
பாடசாலை வீதி, கெருடாவில்,
தொண்டைமானாறு.
Comments
Post a Comment