அண்மையில் மறைந்தும் மறையாமல் எல்லோர் இதயத்திலும் நீங்கா இடம்பிடித்திருக்கின்ற திரு. வயிரவிப்பிள்ளை சிவச்சந்திர தேவன் அவர்கள் புலோலி, புற்றளை என்னும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அமைதியான சுபாவமும் சுறுசுறுப்பான செயல்களினாலும் எல்லோர் மனதிலும் நிறைந்திருக்கின்றார்.
அவர்
ஒரு வங்கி உத்தியோகத்தராக வேலை செய்தார். அப்படி
இருந்தபோதும் அவரது கனவு வடமராட்சியில் ஒரு
சுருக்கெழுத்துக் கழகம் ஆரம்பித்து, அந்த ஊர்ப் பிள்ளைகளுக்கு
நல்ல ஓர் ஒளி மயமான
எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பது. அந்தக் கனவை நனவாக்க வதிரியம்பதியில்
ஒரு சுருக்கெழுத்து நிலையத்தை உருவாக்கி வருடந்தோறும் நூற்றுக்கணக்கான மாணவர்களை சுருக்கெழுத்து, தட்டெழுத்தில்; வல்லவராக்கினார். அதன் பயனாக இந்த மாணவர்களில்
அதிகமானோர் வங்கிகளிலும் அரச நிறுவனங் களிலும்
தனியார் நிறுவனங்களிலும் தட்டெழுத்தாளர்களாகவும் சுருக்கெழுத்தாளர்களாகவும் நியமனம் பெற்று சுருக்கெழுத்துக் கழகத்தின் சிறப்பையும் பெருமையையும் எங்கும் பரப்பினர். அதுவே அந்த நிறுவனத்தின் ஆரம்ப
உறுப்பினரான இவருக்கு பெருமையைச் சேர்த்தது.
தவிரவும், இந்தக்கழகத்தில் ஆங்கிலம், சிங்களம் போன்ற பாடங்களுக்கும் சிறந்த ஆசிரியர்களை நியமித்து ஆங்கில, சிங்கள அறிவையும் மாணவர்களுக்குப் போதனை செய்த பெருமையும் அவரைச் சாரும். தனது காரியாலய வேலைப்பளுவின்
மத்தியிலும் கழக வேலைகளைத் தன்
கண்ணைப்போல் காத்து கழகத்தை வளர்த்த பெருமை இந்த மதிப்பிற்குரிய ஆசானையே
சென்று சேரும். அவர் ஏற்றிய ஒவ்வொரு
விளக்கும் எத்தனையோ வீடுகளின் இருளைப் போக்கியுள்ளன.
இவரது
அமைதியான பண்பும் எல்லோரையும் கவர்கின்ற பேச்சும் அவரது இயல்பான பண்புகளாகும். அதனால் அவரை எல்லோரும் விரும்பினர்.
மற்றவர்களுக்கு உதவி புரியும் மனப்
பான்மை அவரில் மிகுந்து காணப்பட்டது. ஒருவரின் திறமையை மதிக்கும் தன்மை, பதவிகளைப் போற்றும் பண்பு மிகுந்தவராகவும் இருந்தார். இவர் தன் குடும்பத்தினரையும்
நன்கு நேசித்தார்.
பிள்ளைகளின்
எதிர்காலம் ஒளிமயமாக இருக்கவும் அன்னாரின் ஆத்மா சாந்திபெறவும் பிரார்த்திக்கின்றேன்.
Comments
Post a Comment