Skip to main content

எழுத வேண்டிய எழுத்து - திலீப்

பூக்கள் உதிர்வதில்லை
மரங்கள் -
உதிர்கின்றன

முட்கள் குத்துவதில்லை
மனங்களே
குத்தகின்றன

நாட்கள் கரைவதில்லை
ஆண்டுகளே
நகைக்கின்றன

கண்கள் அழுவதில்லை
விழிகளே
விழிக்கின்றன

எண்கள் கேட்பதில்லை
எண்ணங்களே
வேண்டுகின்றன

ஓளடதங்கள் காப்பதில்லை
ஆரோக்கியமே
ஆலாபனையாகின்றன

உயிருக்குள் உயிர்களின் இறைவன்
மனிதமான
சிவச்சந்திரதேவன்

மழைக்குள் நிலவான
காயசல்பமே
சென்று வருக
சென்று வருக

திலீப்
பொறியியலாளர்
அவுஸ்ரேலியா

Comments