Skip to main content

தலைநிமிர வைத்த முன்னோடி - வா.வேணுகோபாலன்

கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்ற சுருக்கெழுத்துப் பயிற்சி வகுப்பில் நான் கற்றிருந்தேன். அத்துடன் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் 6 மாத காலங்கள் உள்ளகப் பயிற்சியும் கழகத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து Sir இன் முயற்சியினால் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  மக்கள் வங்கி யாழ். ஸ்ரான்லி வீதி கிளையில் ஒப்பந் அடிப்படையில் தமிழ் தட்டெழுத்தாளராக நியமனம் கிடைத்தது. பின்னர் 2015ஆம் ஆண்டு எனக்கு வங்கியில் நிரந்தர நியமனம் கிடைத்தது. இப்போது சமூகத்தில் ஓர் வங்கியாளனாக தலைநிமிர்ந்து நிற்பதற்கு காரணம் சிவச்சந்திரதேவன் என்ற  தன்னலமற்ற மனிதரினால் மட்டுமே. என்னைபோலவே பலரின் வாழ்வில் ஒளியேற்றியவர் Sir. ஆனால்  இதற்காக அவர் தனிப்பட்ட முறையில் எதுவிதமான பிரதிபலன்களையும் எதிர்பார்த்தது கிடையாது. எப்போதும் club உடன் இணைந்து இருங்கள், club  நடைபெறும் நிகழ்ச்சியில் பங்குகொள்ளுங்கள், club  இன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருங்கள் என்பது மட்டுமே அவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்வதுடன் அவர்தம் குடும்பத்தினரிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வா.வேணுகோபாலன்
மக்கள் வங்கி,
கிளிநொச்சி.

Comments