‘தன்னலம்
கருதாத மனிதர்கள் உலகை அழகாக்குவார்கள்”, இது எனக்குப் பிடித்ததொரு பொன்மொழி. அதற்கு இலக்கணமாகக் கண்ட மனிதர்களில் ஒருவர்
தான் சிவச்சந்திரதேவன் அண்ணா. அவர் காலமாகினார் என்ற
செய்தி கிடைத்தது. யாராலும் ஈடுசெய்ய முடியாத பெரியதொரு வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளார்.
தமிழில்
ஒத்த கருத்துள்ள சொற்கள் எனும் ஓர் விடயம் உள்ளது.
அதனை மெய்ப்பிப்பது போல வடமராட்சி சுருக்கெழுத்துக்
கழகத்தின் ஒத்த சொல் எதுவெனக்
கேட்டால் சிவச்சந்திரதேவன் அண்ணா எனத் தான் சொல்லலாம்.
சுருக்கெழுத்தாளர்
என்றதொரு பதவி அரச சேவையில்
இருந்த காலத்தில் அதனை வாண்மைக்குரிய ஒரு
பதவியாக தமிழ் மொழி மூலமாக மாற்றியதில்
சிவச்சந்திரதேவன் அண்ணாவின் பங்கு வரலாற்றுப் பெருமைமிக்கது. தனிமரம் தோப்பாகிய அதிசயம் அவரால் நிகழ்த்தப்பட்டது. அவரது பாசறையில் கற்று சுருக்கெழுத்தாளராக அரச நியமனம்
பெற்று வாழ்வில் உயர்ந்தோர்கள் பலர்.
கணினி
உலகம் வந்த போது அவர்
அந்த உலகத்தை வரவேற்றார். அதனையும் வாண்மைக்குரிய துறையாக மாற்றுவதற்கு தனது கழகத்தைப் பயன்படுத்தினார்.
காலத்திற்கேற்பத் தன்னைத் தகவமைத்து சேவைகள் செய்வதில் அவர் வல்லவர்.
அரசாங்கம்
சுருக்கெழுத்தாளர் பதவியை இல்லாமல் செய்து யாவரையும் பொதுமுகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு உள்வாங்கிய போது சுருக்கெழுத்தாளர் பதவிகளின் வலிமை
குன்றியது. அது இக் கழகத்தின்
உயிர் வாழ்தல் தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்கியது.
மக்கள்
வங்கியின் உத்தியோகத்தராகக் கடமையாற்றிய போது வங்கி வட்டாரங்களில்
பெரிதும் மதிக்கப்பட்ட ஒருவராக இருந்தார்.
கோபம்
வராத குணம். எப்போதும் பொறுமை காத்தல். திறமைகளைத் தேடிச் சென்று பாராட்டுதல். நான்கு பேர் நன்றாக வர
வேண்டுமென எப்போதும் நினைத்தல், செயற்படல். பொதுச் சேவைகள் செய்து சந்தோசமடைதல் போன்ற காரணங்களால் இலங்கைத் தமிழ் பேசும் பரப்பில் மிகவும் மதிக்கப்பட்ட ஒருவராகச் சிவச்சந்திரதேவன் அண்ணா இருந்தார்.
நான்
கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் கடமையாற்றிய போது அவரது மனைவி
கிருஷ்ணகுமாரி அக்கா எனது சக அலுவலராகக்
கடமையாற்றினார். அவர் மூலமாகவே சிவச்சந்திர
தேவன் அண்ணா எனக்கு அறிமுகமானார். ஆனால் அவருக்கும் எனக்குமான ஆழமான நட்பு ஒன்று தொடர்ந்து வந்தது. எனது திறமைகள், உயர்வுகளை
அறிந்து தானாகப் பாராட்டும் பண்புகளால் அவரது சேவைகளால் எனது மனதில் இமயமாக
உயர்ந்து நிற்கின்றார்.
அவர்
கொழும்பில் வசிக்கச் சென்றாலும் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு சமூக சேவைகள் உத்தியோகத்தரான
என்னிடம் ஆலோசனைகள் கேட்பார். சென்ற மாதம் ஒரு நாள் எனது
சொந்த விடயமொன்று தொடர்பாக ஆலோசனை கேட்டேன். அவர் பொதுப் பணி
தொடர்பாக தனது வாழ்வை முழுமையாக
ஒப்படைத்துக் கொண்டவர்.
அவரது
ஆன்மா அமைதி அடைவதாக.
அவரது
வெற்றிடம் காலம் காலமாக உணரப்படும்.
வேதநாயகம்
தபேந்திரன்
கைதடி.
Comments
Post a Comment