புலோலி, புற்றளையைப் பிறப்பிடமாகக்கொண்டு உடுப்பிட்டி மற்றும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.க.வ. சிவச்சந்திரதேவன் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகவும் துயரம் அடைந்தோம்.
அன்னார்
ஓய்வுபெற்ற வங்கியாளர் ஆவார். இன்றைய இளைய தலைமுறையே நாளைய
எதிர்காலம் என்பதை உணர்த்தும் வண்ணம் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தை 1985ஆம் ஆண்டு ஆரம்பித்து, இற்றைவரை இளைஞர், யுவதிகள் பலர் பயன்பெற வழிவகை
செய்த அன்னாரின் சேவை, காலத்தால் மறக்க முடியாததொன்றாகும்.
அன்னார்
ஒரு சிறந்த சமூக ஆர்வலர் மட்டுமன்றி, இறை நம்பிக்கையும் சமயப்பற்றும் கொண்டவராவார். மேலும், இவர் இயல், இசை, நாடகம் மற்றும் கலாசார நிகழ்வுகளிலும் ஈடுபாடு கொண்டவர்.
அன்னார்
பல நல்லறங்களைக் கைக்கொண்டு நன்மக்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்து, தனது வாழ்க்கைப் பயணத்தை
நிறைவு செய்து, இன்று இறைவனுள் ஐக்கியமாகியுள்ளார். அவரது ஆத்மா சாந்தியடையவும் அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் மன அமைதி பெறவும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
இ.
பரணீதரன்
சமாதான
நீதவான் (முழு
இலங்கை தீவு),
கணக்காளர்,
இலங்கை
மின்சார சபை,
கொழும்பு.
Comments
Post a Comment