1980களில் கணினி என்கின்ற இலத்திரனியல் சாதனம் பொதுவான சமூகப்பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னதாக இருந்த காலத்தை எண்ணிப்பார்க்கின்றேன். பொதுவாக அலுவலகங்கள் யாவற்றிலும் தட்டச்சு ஓசை கேட்பதாக உணர்கிறேன். அந்த உணர்வுகளோடு, அமரர் வ.சிவச்சந்திரதேவன் அவர்களும் இரண்டறக் கலந்துள்ளார். அவர் உருவாக்கிய சுருக்கெழுத்தாளர்கள், தட்டெழுத்தாளர்கள் இன்றும் அவர் பெயர் சொல்ல கணினி மூலமான கடிதங்கள் மற்றும் ஆவணங்களைத் தயாரிப்பதிலும் முன்னணியில் இருப்பதை நாம் கண்ணாரக்காண்கின்றோம்.
எண்ணங்களை எழுத்துருவாக்கும் கருவியொன்று கண்டு பிடிக்கப்பட்டது என்ற தகவல்வரும் வரைக்கும் கடிதங்களிலும் ஆவணங்களிலும் வடமராட்சியில் அமரர் அவர்களின் பெயர் நின்று நிலைக்கும் என்பது திண்ணம்!
அமரர் அவர்கள்
தான் உருவாக்கிய வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம் சார்பாக எமது பாடசாலை மாணவர்களின்
வாசிப்பு ஆற்றலை மேம்படுத்துவதற்காக நூறாயிரம் ரூபாய் பெறுமதியான வாசிப்பு நூல்களையும்
மற்றும் அலுமாரிகளையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இதனூடாக எமது பாடசாலை நூலகத்திலும்
அவர் பெயர் நீடித்து வாழும் என்று சமர்ப்பணம் செய்கின்றோம். மேலும், அன்னாரின் ஆத்மா
சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்.
சாந்தி! சாந்தி!!
சாந்தி!!!
Comments
Post a Comment