Skip to main content

எழுத முடியாத எழுத்து - நல்லூர் பூவேந்தன்

எழுத முடியாத எழுத்து
என் -
எழுத்துக்குள்
எழுத மறுக்கின்றது.

பழகிக் களித்த மதிப்பு
என் -
பாவிற்குள்
படிமங்களை நீட்டுகின்றது.

வாழ்ந்த காலத்தின் வனப்பு
என் -
வலிகளுக்குள்
வரிகளை தீட்டுகின்றது.

சுழன்ற சேவையின் உயிர்ப்பு
என் -
சூக்குமத்திற்குள்
சுயங்களை அழைக்கின்றது.

தங்கக் குழந்தைகளின் தந்தை
என் -
தமிழுக்குள்
சிவச்சந்திரதேவனாகின்றது

சங்கப் பலகையின் துணை
என் -
சமர்ப்பணத்தில்
சரித்திரத்தின் நிறைவாகிறது.

தோழமைப் பூக்களின் தோழன்
என் -
கண்ணீர் தோப்பில்
கவிதையாகின்றது.

 

நல்லூர் பூவேந்தன்
யாழ்ப்பாணம்.

Comments