யாழ்.
மக்கள் வங்கியில் சேவையாற்றிக்கொண்டிருந்த மறைந்த திரு.வ.சிவச்சந்திரதேவனின்
தொடர்பு நாளடைவில் சிறந்த நட்புறவை எங்களுக்குள் ஏற்படுத்தியது. எவ்விடயமானாலும் சிறந்த மனப்பான்மையுடனும் அன்பாகவும் வெளிப்படுத்தும் இயல்பு அவருடன் நான் நெருங்கிப் பழகும்
வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
வடமராட்சியில்
இளைஞர் யுவதிகளுக்கு சுருக்கெழுத்துஇ தட்டெழுத்தைப் பயிற்றுவிப்பதற்காகக் கழகமொன்றை ஸ்தாபித்து, அநேகர் பயனடைவதற்காகத் தன்னலமற்ற சேவையாற்றியது மட்டுமல்லாது, பரீட்சையில் சிறந்த பெறுபேற்றையடைந்தவர்களுக்கு அரச திணைக்களங்களில் வேலைவாய்ப்பைப்
பெறுவதற்காக மேலதிகமான பயிற்சியையும் வழங்கிவந்துள்ளார். மேலும், திறந்த
போட்டிப் பரீட்சைகளில் தோற்றிய மாணவ மாணவிகளுக்கு நேரகாலம்
பாராது சிறந்த பயிற்சிகளையும் வழங்கி வந்துள்ளார். இதுமட்டுமல்லாது திணைக்களத் தலைவர்களை அழைத்து வருடாவருடம் பயனுள்ள கருத்தரங்குகளை நடாத்தி. மாணவர்களை விழிப்படையச்செய்துள்ளார்.
யாழ்.
தொழில்நுட்பக் கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளராகக் கடமையாற்றி, மாணவர்களின் சிறந்த பெறுபேற்றுக்கு வித்திட்ட துடன் அதிபர் மற்றும் விரிவுரையாளர்களின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். என்னைச் சந்தித்த நேரங்களில்; பயிற்சிநெறிகளை எப்படியெல்லாம் திறம்படச் செய்து மாணவர்களை முன்னேற்றமடையச் செய்யலாம் என்பதிலேயே கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார். அன்னாரின் திடீர் மறைவு குடும்பத்தாருக்குப் பேரிழப்பாக அமைந்துவிட்டது. அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்
கிடைப்பதாக‚
ரி.கே. ராஜேந்திர ராவ்
ஓய்வுநிலை
ஆங்கிலச் சுருக்கெழுத்தாளர்,
அரசாங்க
அதிபரின் பிரத்தியேகச் செயலாளர்,
மாவட்டச்
செயலகம்,
யாழ்ப்பாணம்.
Comments
Post a Comment