தேவன், மக்கள் வங்கியில் சிறந்த பணியாளராகவும் சமூக அக்கறையுள்ள சமூகப் பணியாளராகவும் வடமராட்சிப் பிரதேசத்தில் வெற்றிநடை போட்டவரும் ஆவார். அவரது அர்ப்பணிப்பான சேவையால் பல தட்டெழுத்து, சுருக்கெழுத்து அலுவலர்களை உருவாக்கினார். பலரை அரச நிறுவனங்கள், வங்கிகளில் கணினி பக்க வடிவமைப்பாளர்களாக உருவாக்கினார்.
வடமராட்சிப் பிரதேசத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தவர் நண்பர் தேவன். "வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிறைந்தவர் யார்?" என கவிஞர் குறிப்பிடுவது போல, மக்கள் வங்கியிலும் மக்களின் மனங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
அவரது வாழ்வில் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு என்பவற்றுடன் சகபணியாளரின் மனம் நோகாது நெகிழ்வுப் போக்காகச் செயற்பட்டவர். மரணமாவதற்கு ஒருசில வாரங்களுக்கு முன் என்னுடன் தொலைபேசியில் இனிமையாக உரையாடினார். எமது நலனைப்பற்றி விசாரித்தார். அது மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருந்தது. "தனக்காக வாழாமல் பிறருக்காக வாழுங்கள்" என்ற சான்றோரின் கருத்துப்போல தன் வாழ்நாளை சமூகப் பயன்பாட்டுக்காகச் செலவிட்டார்.
பலரின் வாழ்வுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிய பெருந்தகை. அவரது மரணம் ஒரு முடிவு அல்ல. அவரின் எண்ணங்களும் செயற்பாடுகளும் வடமராட்சிப் பிரதேசத்தில் வாழையடி வாழையாக வளர்ந்துகொண்டே இருக்கும். அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பரம்பொருளைப் பிரார்த்திக்கின்றோம்.
க. ஸ்ரீதரன்
பிரதி முகாமையாளர்,
மக்கள் வங்கி பிராந்திய அலுவலகம்,
யாழ்ப்பாணம்.
Comments
Post a Comment