Skip to main content

வேலை வாய்ப்பு ஒன்றே குறிக்கோள் - தர்ஷினி கிருஷ்ணகுமார்

யாழ். மாவட்ட இடப்பெயர்வு, அதாவது 1995 - 1996  காலப்பகுதியில்  நான் கழகத்தில்  பயின்றேன். அது இலங்கை இராணுவம் வட பகுதியைக் கைப்பற்றிய  காலம். எல்லோரும் பயத்துடன் வீடுகளில் இருந்தோம்.  அந்த  நேரத்திலேயே sir  மனத்துணிவுடன் எங்களை அழைத்து  வகுப்புக்களை  நடாத்தினார். வேலைவாய்ப்பு  ஒன்றே குறிக்கோள்  என வழி நடாத்தினார் பயிற்சிகள் அளித்தார்.  பயிற்சியின் போது ஒரு நாளில்  CR  கொப்பியில் 10 பக்கங்கள் சுருக்கெழுத்து எழுதச் சொல்வார். அந்த நேரம் மனதிற்குள் பல நாள் திட்டியிருப்பேன். ஆனால் Sirஆல்தான்  எனக்கு  ஒரே நேரத்தில்  மத்திய  அரசாங்க தமிழ் சுருக்கெழுத்தாளர் பதவி, மாகாண  அரசின் தமிழ்  சுருக்கெழுத்தாளர் பதவி, மாகாண அரசின் தமிழ் தட்டெழுத்தாளர் பதவி ஆகிய வேலைவாய்ப்புக்கள் கிடைத்தன.  இக்காலப் பகுதியிலேயே கழக அங்கத்தவர்கள் பலவருக்கு வேலைவாய்ப்புக் கிடைத்தது.  அவர்கள் அனைவரும் Sir  மறக்கவே மாட்டார்கள். Sir இன் ஆத்மா சார்ந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.

திருமதி தர்ஷினி  கிருஷ்ணகுமார்
பிரதேச செயலகம்,
கரவெட்டி.


Comments