மக்கள் நேயம் கொண்ட மானிடர்கள் என்றும் மறைவதில்லை. மானிட வாழ்வில் தனக்காக மட்டுமன்றி தன் சமூகத்திற்காகவும் பல்வேறு சேவைகளை செய்தவர்தான் காலஞ்சென்ற வ.சிவச்சந்திர தேவன் ஆவார். தனது ஊரின் உட்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்வதில் முன்நின்று செயற்பட்டவர். இந்த எண்ணக்கருத்தின் அடிப்படையில் உதயமானதே STENO CLUB ஆகும். இதனுடைய செயலாளராக பணியாற்றும்போது என்னோடு அறிமுகமானவவர்.
கல்வியில் புகழ் பூத்த வடமராட்சி மண்ணில் கல்வி வளர்ச்சியில் இன்னுமொரு மைல்கல்லாக STENO CLUB விளங்கியது. இதற்கு மேலும் மகுடம் சூடியது போல் தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையின் (NAITA) அரச சான்றிதழினை பெற்றுக் கொடுத்தமையானது காலஞ்சென்ற வ.சிவச்சந்திரதேவன் அவர்களையே சாரும். கடந்த முப்பது வருடங்களிற்கு மேலாக இவரது ஆளுமையும் அர்ப்பணிப்பான சேவையினூடாக NAITA உடன் இணைந்து பெறுமதிமிக்க சான்றிதழினை பெற்றுக்கொடுக்க வழிசமைத்தார்.
வடமராட்சி மண்ணின் மாணவர்கள் மட்டுமன்றி, ஏனைய பிரதேச மாணவர்களிற்கும் கல்வி போதித்த
பெருமை இவரையே சாரும். நேர்மையான நிர்வாகியாக விளங்கிய இவரது சேவையின் பயன் இன்று இலங்கையின்
நீதிமன்றங்களில் பலர் Stenographer ஆக பணிபுரிவதிலிருந்து அறியலாம்.
நான் NAITA வின் மாவட்ட அதிகாரியாக பணியாற்றிய போது தன்னுடைய நேரத்தையும் பொருட்படுத்தாது STENO CLUB இல் பயில்கின்ற மாணவர்களுக்கு சுருக்கெழுத்தோடு வேறு வகையான தொழிற்பயிற்சிகள் வழங்க வேண்டும் என்பது தொடர்பாகவே நீண்ட நேரம் உரையாடுவார். இதன் பயனாகவே காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப கணினிப் பயிற்சி நிலையத்தையும் ஆரம்பித்து நடத்தினார்.
இவரது இழப்பு எனக்கு மிகுந்த துன்பத்தை
அளிக்கின்றது. இவரின் இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது. தன்னலம் பாராது சமூக நலனே
மேல் என எண்ணி வாழ்ந்த இவரது வாழ்வு போற்றுதற்குரியது. இவரது பிரிவால் வாடும் துணைவி, பிள்ளைகள், சுற்றத்தினருக்கு எவ்வித ஆறுதலும் கூற முடியாதுள்ளது. இவரின் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திப்போமாக‚
கி.கிருஷ்ணபாலன்
முன்னாள் மாவட்ட அதிகாரி,
தேசிய பயிலுனர் கைத்தொழிற்பயிற்சி அதிகாரசபையின் (NAITA )
யாழ். மாவட்டம்
Comments
Post a Comment