Skip to main content

மறைந்தும் மறையாத மனிதர்! - மா.கோ. காண்டீபன்

அமரர் சிவச்சந்திரதேவன் அவர்கள் ஒரு வங்கியாளராக சிலருக்கு அறிமுகமாக இருந்தார். பல குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு வித்திட்ட பெரிய உள்ளம்கொண்டவர். குறிப்பாக நான் அறிந்த வகையிலே வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தின் இயக்குனராக இருந்து, பல மாணவர்கள் ஆங்கில, தமிழ் சுருக்கெழுத்து, தட்டச்சுப் பயிற்சி நெறியை நிறைவுசெய்ய வழிகாட்டினார். இவ்வாறு இக் கழகத்தில் பயிற்சி பெற்றவர்கள் பாராளுமன்றத்திலும் நீதிமன்றங்களிலும் பல வங்கிகளிலும் பல்வேறு அமைச்சுக்களிலும் திணைக்களங்களிலும் பணியாற்றி வருகின்றனர். இவரது அளப்பரிய சேவைமூலமாக இன்று பலர்  சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துடன் வாழ்வதை அவதானிக்க முடிகின்றது.

இவர்போலவே இவரது மனைவியும் இந்து சமய கலாசார திணைக்களத்தில் ஒப்படைக்கப்படுகின்ற ஆலயப்பணிகளாக இருந்தாலும்சரி, ஏனைய பணிகளாக இருந்தாலும்சரி அதனைப் பொறுமையுடன் நிறைவேற்றுவார். அமரரைப் போலவே அவருடைய  பிள்ளைகளும் ஒவ்வொரு செயற்பாட்டையும் சுறுசுறுப்பாக நிறைவேற்றுவதைக் காணமுடிகிறது.

அமரர் சிவச்சந்திரதேவனுடைய சிறந்த வழிகாட்டலானது  அவருடைய குடும்பத்திற்கு மட்டுமல்லாது வடமராட்சி மக்களுக்கும் சிறந்ததொரு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.  இவரது இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்திற்கும் ஏனைய உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடுஇ அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

திரு.மா.கோ. காண்டீபன்
பிரதம உள்ளகக் கணக்காய்வாளர்,
மீள்குடியேற்ற அமைச்சு,
கொழும்பு.

Comments