1993ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதந் தொடக்கம் அரச சேவையில் இணைந்து கொண்ட திருமதி கிருஷ்ணகுமாரி சிவச்சந்திரதேவன் அவர்கள், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் 2014ஆம் ஆண்டு மே மாதந் தொடக்கம் முகாமைத்துவ உதவியாளராகத் திறம்படச் செயலாற்றிவரும் உத்தியோகத்தர். அவரது கணவனாரின் இழப்பு அவர்களது குடும்பத்தாருக்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பு. அவரது நினைவுகளைச் சுமந்து வரும் இந் நினைவுப் பகிர்வு மலரில் அன்னாரின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.
1950ஆம் ஆண்டில்
பிறந்து 25 ஆவது வயதில் மக்கள்
வங்கியில் சுருக்கெழுத்தாளராகப் பணியாற்றத் தொடங்கினார். அதற்கு
அவர் கடந்து வந்த பாதைகள் கடினமானவை.
முயற்சி செய்து கொண்டே இருக்கவேண்டும் என்பதற்கு அவர் ஒரு முன்னுதாரணம். அதன்
தொடக்கம் தான் வாழ்ந்த சமூகத்தில் வாழும் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்க
ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியது.
அந்த உன்னத எண்ணத்தில் முகிழ்த்ததே "வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம்".
1985ஆம் ஆண்டு "வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம்" ஆரம்பித்தார். அதற்கான ஒரு கழகப் பாடல், அதற்கான ஒரு கழகக் கொடி என, அக்கழகத்தின் பிதாமகனான இவரது எண்ணத்தில் உதித்த இந்தக் கழகம் இன்று கணினி யுகத்திற்கு ஏற்ற வகையிற் தன் பயிற்சிகளை மாற்றி, இன்றுவரை ஏறத்தாழ இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களை உருவாக்கியிருக்கிறது. வடமாகாணத்தின் வங்கிகளில், நீதிமன்றங்களில், உள்ளுராட்சி மன்றங்களில், அரச அலுவலகங்களில் உள்ள சுருக்கெழுத்தாளர்களிற் பெரும்பாலானோர் இக்கழகத்தின் ஊடாகவே வெளிவந்தோர் என்றால் மிகையில்லை.
அன்னாரின்
இம் முயற்சிகளும் அதன் அறமும் அவர்தம்
மக்கட் செல்வங்களையும் ஆளுமை மிக்க ஒழுக்கசீலர்களாக வளர்த்தெடுத்திருக்கிறது. அன்னாரது வாழ்வு என்றும் மதிக்கப்பட வேண்டியது. அவரது மகோன்னத சேவை இறையருளாகி அவரது
குடும்பத்தாருக்கு நன்மையே விளைய இறைவனை வேண்டுகிறேன்.
திரு.இ.கர்ஜின்
உதவிப்
பணிப்பாளர்,
இந்து
சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்,
கொழும்பு-04.
Comments
Post a Comment