1985ஆம் ஆண்டு ஐப்பசி
மாதம் எங்கள் ஆசானை முதன்முதலில் அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலயத்தில் தமிழ், ஆங்கில சுருக்கெழுத்துப் பயிற்சியின் ஆசிரியராக அறிமுகமானோம்.
அன்று முதல் ஆசிரியாரின்
பெரு முயற்சியினால் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு, சிறப்பாக வகுப்புக்கள் நடைபெற்றன. மாணவர்களுக்கிடையிலான போட்டிகளை
வெவ்வேறு இடங்களில் நடாத்தி மாணவர்களுக்கு ஆக்கமும்
ஊக்கமும் அளித்திருந்தார் . அவர் தனது பணிக்கு
மேலாக இலவசமாகச் செய்த இச்சேவையினால் பல மாணவர்கள்
வங்கிகளிலும், பிரதேச செயலகங்கள் உட்பட்ட அரச திணைக்களங்கள் மற்றும்
ஏனைய நிறுவனங்களிலும் கடமை யாற்றி வருகின்றார்கள். அத்துடன் வடமராட்சி
சுருக்கெழுத்துக் கழகத்தில் படித்த மாணவர்களை குறைந்தளவு
வேதனத்துடன் ஆசிரியர்களாக்கி, அதன்மூலம் அவர்களை ஊக்குவித்திருந்தார்.
என்னைப் பொறுத்தவரை ஆசிரியர் அவர்கள்
நாம் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தட்டச்சு
இயந்திரத்தினையும் வழங்கி, நாம் சித்தியடைவதற்கு பெரும்
ஊக்கமளித்திருந்தார். இன்று நாம் உத்தி யோகத்தில்
இருப்பதற்கு ஆசிரியாரின்
விடாமுயற்சிதான் காரணம்.
தனது கடமைமுடிந்து நேராகவே
கழகத்திற்கு வந்து கண்காணிப்பார். தனது மாணவர்களை
நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் மற்றும் தில்லையம்பலபிள்ளையார் கோயில் என்பவற்றுக்கு அழைத்துச்சென்று பொங்கலிட்டு, இறைவனுக்கு படைத்து, மகிழ்ச்சியாக
இருப்பதற்கான உறவுப்பாலமாக இருந்தார். அந்நாட்களை மறக்கமுடியாமல் உள்ளது. நான் ஆசிரியரினால் இந்தளவுக்கு
முன்னேறியுள்ளேன்
என்று அடிக்கடி சிந்திப்பதுண்டு. அவரின் மனம்போல் அவர் சிறந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கையில் காலன் இலகுவாக அழைத்து விட்டான். மறைந்தாலும்;
எம் நினைவைவிட்டு அகலா ஆசிரியர் அவர்கட்கு மோட்சம்
கிடைக்க இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
திருமதி யோகராணி ரவிச்சந்திரன்
பிரதம முகாமைத்துவ சேவை உததியோகத்தர் ,
பிரதேச செயலகம்,
வலிகாமம் மேற்கு, சங்கானை,
Comments
Post a Comment