பிறவிகள் அனைத்திலும் மானிடப்பிறவி அரிதிலும் அரிது, அதிலும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிதினும் அரிது என்பதற்கமைவாக அமரர் உயர்திரு க.வ.சிவசந்திரதேவன் அவர்கள் விளங்கினார். இவர் மக்கள் வங்கியில் அந்தரங்கச் செயலாளராகப் பதவி வகித்து, சிறப்புடன் தனது சேவையை செய்து, தனக்கென ஒரு முத்திரை பதித்து, ஓய்வு பெற்றிருந்தார்.
"இயல்பினான்
இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள்
எல்லாம் தலை"
என்பதற்கிணங்க
இல்வாழ்கையின் கண்நின்று அதற்குரிய இயல்புகளோடு இல்லறத்தை நல்லறமாக நடாத்தி, தனது நல் குலவிருட்சங்களைக் கண்மணிகளாக வளர்த்து, கல்வி புகட்டி, உறவுகளுக்கும் தனது குடும்பத்திற்கும் உரிய கடமைகளையாற்றி, எல்லோரிடமும் அன்பாகவும் பண்பாகவும் பழகி, ஊர்ப்பற்று உடையவராகவும் சமூகசேவையாளராகவும் வாழ்ந்து, இறைவனடி சேர்ந்துள்ளார். இவரது இழப்பு குடும்பத்தினருக்குப் பேரிழப்பாகும்.
எவ்விடயத்திலும்
தனது கருத்துக்களை துணிச்சலுடன் வெளிப்படுத்தும் ஆற்றல் படைத்த இவர், சைவசமய வழிபாட்டிலும் கலாசாரத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார். அதற்கமைய மொறட்டுவை, சொய்சாபுர இந்து மன்றத்தில் ஆயுட்கால அங்கத்தவராக இருந்து மன்றத்தில் நடாத்தப்படும் சமய அறிவுப் போட்டி, பரிசளிப்பு விழா, நவராத்திரிப் பூசை மற்றும் ஏனைய
சமய வைபவங்களிலும் பங்கேற்பதுடன் தன்னால் இயன்ற உதவிகளையும் வழங்கி வந்துள்ளார்.
இவரது
பிரிவால் துயருறும் மனைவி மக்கள், மற்றும் குடும்ப உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத்
தெரிவிப்பதோடு, அமரர் இறைவனின் திருப்பாதங்களில் பேரின்பப் பெருவாழ்வு பெற வேண்டுமென எல்லாம்
வல்ல இறைவனை வேண்டி, அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம்
சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
திருமதி
த. மரியசீலன்
ஓய்வு
நிலை ஆசிரியர்
கொ/இந்துக்
கல்லூரி, இரத்மலானை.
முன்னாள்
செயற்குழு உறுப்பினர்,
சொய்சாபுர
இந்து மன்றம், மொறட்டுவை.
Comments
Post a Comment