வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தின் ஸ்தாபகரும் நீண்டகாலம் அக்கழகத்தின் தலைவராக இருந்து அதனைச் சிறப்பாக வழிநடத்தி வந்த அமரர் க.வ. சிவச்சந்திரதேவன் அவர்களின் பிரிவுச்செய்தி அறிந்து மிகவும் மனவேதனை அடைகின்றேன்.
வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தனது சிறப்பான சேவையினை
முன்னெடுத்ததநூடாகப் பல நூற்றுக்கணக்கான
தட்டெழுத்தாளர்களையும் சுருக்கெழுத்தாளர்களையும் உருவாக்கியுள்ளமையும் பல்வேறு அரச நிறுவனங்களிலும், குறிப்பாக நீதிமன்றங்களிலும் சுருக்கெழுத்து சேவையினை மேற்கொள்வோர் இந்நிறுவனத்தில் தமது
பயிற்சியினைப் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கனவாகும்.
இந்நிறுவனமானது இலாப நோக்கின்றி மிகவும்
குறைந்த வசதிகளுடன் தனது
அர்ப்பணிப்பான சேவையினை வழங்கிய மைக்கு இந்நிறுவனத்தின் தலைவர் அமரர் க.வ சிவச்சந்திரதேவன் அவர்களின் அர்ப்பணிப்புள்ள சேவை மிகவும் உறுதுணையாக
இருந்தது என்பதனைக் குறிப்பிட
விரும்புகின்றேன். மேலும் இந்நிறுவனம் வடமராட்சி
தெற்கு, மேற்கு பிரதேச செயலகத்தின் கீழ் வலிந்துதவு சமூக
சேவை நிறுவனமாக பதிவு செய்யப்பட்டிருப்பதுடன் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் மூன்றாம் நிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளமையும்
குறிப்பிடத் தக்கதாகும்.
நான் கரவெட்டி பிரதேச
செயலாளராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் இந்நிறுவனத்தின் சேவைகளை நேரடியாக அவதானித்தினூடாக அதன் செயற்பாட்டிற்கு
வழிசமைத்த அமரர் க.வ. சிவச்சந்திரதேவன்
அவர்களின் சேவை பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளது
என்பதனைக் குறிப்பிடவிரும்புகின்றேன்.
பழகுவதற்கு எளிமையும், இயல்பாக எல்லோருடனும் சிரித்த முகத்துடன்
மிகுந்த நட்புறவுடனும் பழகும் ஆற்றலும் கொண்ட இவர் கழகத்தினுடைய தேவையை
நிறைவு செய்வதற்கு பல்வேறு மட்டங்களிலும் தொடர்பாடல்களை மேற்கொண்டு வேலைத் திட்டங்களை முன்னெடுத்தமை பாராட்டத்தக்கதாகும்.
இவர் ஆற்றிய சேவையும்
உருவாக்கிய மாணவர்களும, இவரின் பெருமையினைத்
தொடர்ந்து இவ்வுலகில் நிலைநாட்டுவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அன்னாரின் பிரிவால்
துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்கள், நண்பர்களிற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தி
அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
சி. சத்தியசீலன்
ஆளுநரின் செயலாளர்,
வடமாகாணம்.
Comments
Post a Comment