அன்போடும்
மரியாதையோடும் "சேர்" என எம்மால் அழைக்கப்
பட்ட அமரர் வயிரவிப்பிள்ளை சிவச்சந்திரதேவன் அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்து மாதம் ஒன்று ஓடி மறைந்துவிட்டது.
தனது
சொல்லாலும் செயலாலும் எமக்கெல்லாம் ஊக்கமளிப்பவராகவும், ஆலோசகராகவும், எம்மீது அக்கறைகொண்ட ஒருவ ராகவும், எங்களால்
நேசிக்கப்பட்ட எங்கள் சேரின் திடீர் இழப்பு எமக்கு மட்டுமல்ல, எமது சமூகத்திற்கே பாரிய
இழப்பாக அமைந்துவிட்டது.
ஏதோ
பிறந்தோம் எப்படியோ வாழ்ந்தோம் என்றில்லாமல், இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்ந்துகாட்டிய ஒரு
நல்ல மனிதரை நாம் இழந்துவிட்டோம்.
1985இல் எங்கள்
சேரால் நிறுவப்பட்ட வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தில் 1992இல் நான் மாணவியாக
இணைந்து கொண்டேன். சுருக்கெழுத்து
- தட்டச்சில் சிறப்புத் தேர்ச்சியைப் பெற்றதையிட்டு 1992 - 1993 காலப்பகுதியில் யா/நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திற்கு என்னைப் பயிற்சியாளராக
அனுப்பிவைத்தார். அங்கு முழுமையாகப் பயிற்சியினைப் பெற்ற பின்னர் யாழ். செஞ்சிலுவைச் சங்கத்தால் நடாத்தப்பட்ட சுருக்கெழுத்து -தட்டச்சு ஆசிரியர் தெரிவில் 1993 - 1994இல் நான் தெரிவானேன்.
எனது கற்பித்தல் முறையைப் பரீட்சிக்கும்வகையில் யாழ். இலங்கை செஞ்சிலுவைச் சங்க மாணவர்களுக்கும் வடமராட்சி
சுருக்கெழுத்துக் கழக மாணவர்களுக்குமிடையே போட்டியொன்றை ஒழுங்குசெய்து
நடாத்தினார். அப்போட்டியில் யாழ். இலங்கை செஞ்சிலுவைச் சங்க மாணவர்களே வெற்றியீட்டினார்கள்.
அந்த வகையில் அவர் எதிர்பார்த்த பெருமையைப்
பெற்றுக்கொடுத்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன்.
அதுமட்டுமல்லாமல்
மக்கள் வங்கியால் 1994இல் நடாத்தப்பட்ட ஆட்சேர்ப்புப்
பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்று 1995இல் சுருக்கெழுத்தாளராகத் தெரிவானேன். எனது
நியமனம் யாழ். பிராந்திய தலைமையகத்தில் கிடைத்தது. அங்கு எனது ஆசானுடனே இணைந்து
வேலைசெய்யும் சந்தர்ப்பம் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இவை
அனைத்திற்கும் பெரும் பங்கு எங்கள் சேரையே சாரும். அன்று எனக்குப் பலமாக இருந்த எனது ஆசான், 23.05.2020இல் மரணிக்கும்வரை நல்வழி காட்டும் ஒரு தந்தையாகவே இருந்தார்.
எங்கள்
சேர் மறைந்தாலும் அவர் எமக்கு ஆற்றிய
சேவைகள் மறையவும் இல்லை‚ மறக்கக்கூடியவையும் அல்ல. அன்னாரின் ஆத்மா உயர்நிலை அடைய ஆண்டவனின் பாதங்களைப்
பணிந்துகொள்கின்றேன்.
திருமதி
யோ. மதனராணி
பிரதி
முகாமையாளர்
மக்கள்
வங்கி, சாவகச்சேரி
Comments
Post a Comment