Skip to main content

வடமராட்சி சுருக்கெழுத்து கழகத்தின் நினைவுகளில் ஆசான்! - செல்வராசா லக்ஷிதா

அன்பு, பண்பு, பாசம், பொறுமை, அமைதி ஆகிய எல்லா நற்குணங்களும் அமையப்பெற்றவர் எமது ஆசானும் கழக ஸ்தாபகருமான திரு... சிவசந்திரதேவன் (சிவா சேர்) அவர்கள். 17.12.1950 அன்று இவ்வுலகில் மலர்ந்து 23.05.2020இல் இவ்வுலகை விட்டு உதிர்ந்தாலும், ஆசான் இவ்வுலகில் வாழ்ந்த காலப்பகுதியில் அவருடைய மனம் திறந்த எண்ணிலடங்காத சேவைகள் மறக்க முடியாதவை.

அந்த வகையில் வடமராட்சி சுருக்கெழுத்து கழகத்தின் விசுவாசமுள்ள மாமனிதர் தலைவராக தமது பொறுப்பினை மிக நீண்டகாலமாக ஏற்று கழகத்திற்காகத் துடிப்புடன் போராடி கழகத்தினூடாக தமது சேவையினை ஆற்றிவந்தார். ஆசான் அவர்கள் ஓய்வு பெற்ற வங்கியாளராவார். அவர் ஆன்மீகத் தொண்டுகளிலும் ஈடுபாடுள்ளவராகவும் விளங்கினார்.

தோற்றம் உண்டேல் மறைவும் உண்டு

பிறப்பு பிறந்தவரை அழவைக்கும்

இறப்பு பிறரை அழவைக்கும்

இது இயற்கையின் நியதிஅவர் உடம்பு அழிந்தாலும் வாழ்ந்த முறை, அவர் பெயர், புகழ் ஒன்றும் அழியாது. பண்டகை பிள்ளையாரின் பாதாரவிந்தங்களில் முத்திப்பேறு பெற்று, ஆசான் எல்லையில்லாப் பேரின்பத்தைப் பெறவேண்டுமென வேண்டுகின்றேன்.

செல்வராசா லக்ஷிதா
பொருளாளர்
வடமராட்சி சுருக்கெழுத்து கழகம்

Comments