இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் ஆரம்ப கால உத்தியோகத்தர்களில் நானும் ஒருவராக இருப்பதனால் நீண்டகால உறவு உண்டு. இந்த வரலாற்றுக் காலத்தில் சக நண்பர்கள், நண்பிகள், அவர்தம் குடும்ப உறுப்பினர் அனைவரினதும் அன்பும் உறவும் எனக்குக் கிடைத்தது. அத்தகையவர்களில் ஒருவர்தான் கிருஷ்ணகுமாரி.
நான்
நூல்நிலையப் பொறுப்பினை வகித்தபடியால் அங்கு பணிபுரியும் அனைவரும் என்னைச் சந்திப்பார்கள். அவர்களது பொழுதுபோக்கிற்குப் புத்தகம் எடுப்பதற்கே என்னை நாடி வருவார்கள். கிருஷ்ணாவும்
நூல்நிலையத்திற்கு அடிக்கடி வந்துசெல்வார். கிருஷ்ணாவின் கணவரும் பிள்ளைகளும் கலைநாட்டம் உள்ளவர்கள் என்பதால் அவர்களைப்பற்றி கிருஷ்ணா என்னுடன் உரையாடுவார்.
அதிலிருந்து அன்பான கணவன். அருமையான குழந்தைகள் என்பதை அறிந்திருந்தேன். அவரது கணவர் அவருக்குப் பலவழிகளிலும் உதவியாக இருந்தார். எமது திணைக்கள விழாக்களில்
அவர் பங்குகொள்வார். உடன் பிறந்தவர்போல் எல்லோருடனும்
அன்பாக உரையாடுவார். அவரின் இழப்பு அவர்தம் குடும்பத்தினருக்குப் பேரிழப்பாகும். என்றும் அவர் தெய்வமாக இருந்து
அந்தக் குடும்பத்துக்குத் துணையாக
இருப்பார். அன்னாரின் ஆத்மா சாந்திக்காக இறைவனைப் பிரார்த்தித்துக்கொள்கின்றேன்.
திருமதி
ந.புவனேஸ்வரி
நூலகர்,
இந்து
சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
Comments
Post a Comment