23.05.2020 அன்று சிவச்சத்திரதேவன் அவர்கள் கொழும்பில் காலமாகிவிட்ட செய்தி அறிந்து மிகவும் வேதனைப்பட்டுள்ளேன்.
சிவச்சந்திரதேவன் அவர்கள் மக்கள் வங்கியில் ஆரம்பத்தில் சுருக்கெழுத்தாளராகவும் ஓய்வுபெறும்போது யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலக அந்தரங்கச் செயலாளராகவும் கடமையாற்றினார். அது மாத்திரமின்றி கோயில்களிலும் அவரது பங்களிப்பு இருந்தது. உடுப்பிட்டிப் பண்டகைப் பிள்ளையார் ஆலயத்தில் புதுவருட கைவிசேஷத்தினை தனது கடமையென நினைத்து முழுப்பொறுப்பினையூம் ஏற்றுக்கொண்டார்.
சிவச்சந்திரதேவன் அவர்களின் முகம் அன்று முதல் இன்று வரை என்றும் வாடியதில்லை. அவருடன் பேசியவர் உள்ளம் என்றும் துன்முகத்தை நாடியதில்லை.
அவர், ஆன்மா ஈடேற்றத்துக்காக இறைவனால் ஆட்கொள்ளப் பட்டிருக்கிறார். மீண்டும் மறுபிறவி எடுப்பார் என்பது திண்ணம்!
அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பண்டகை விக்னேஸ்வரனின் ஆசிகிட்டும். அவர்தம் குடும்பத்திற்குத் தெரிவிப்பதோடு, அவர் காட்டிய வழியை பின்பற்றி ஒழுக ஆசி கூறுகிறேன்.
பிரம்மஸ்ரீ கனக கேதீஸ்வரக்குருக்கள்
பிரதமகுரு,
பண்டகைப் பிள்ளையார் கோயில்,
உடுப்பிட்டி வீரபத்திர கோயில்.
Comments
Post a Comment