Skip to main content

என் உள்ளத்திலிருந்து... - சுதாஜினி கேதீஸ்வரன்|

பாசம் நிறைந்தவராய்

பண்பு மிகுந்தவராய்

நேசமாகப் பழகி சிரித்து நிற்கும்

கோலம் எங்கும் நிறைந்திருக்க


நூற்றுக்கு
முந்நூறு தடவை - அண்ணா

என் அருகிலிருந்து கிருஷ்ணாக்கா உங்கள்

நாமம் உச்சரித்துக் கொண்டிருக்கும்போது

உங்கள் தொலைபேசியும் அழைக்கும்


அன்பு
மொழி பேசி

உங்கள் வார்த்தைகளில் அன்பாக

உங்கள் மனைவியைக் கடித்து

உங்கள் உதட்டில் ஒரு புன்னகை பூத்துநிற்கும்


கொரோனா
செய்தி  தெரிந்திட

கையடக்கத் தடவியை அடிக்கடி தடவ

தடவி தந்த செய்தி கண்டு அதிர

செய்வதறியாது நின்றேன் அக்கா


கொரோனாவையும்
மறந்தேன்

ஊரடங்கையும் மறந்தேன்

என் கால்கள் உங்கள் வீட்டிற்கு

ஓடி வந்தது அக்கா ஆறுதலுக்காக


அம்மாவாயும்
அப்பாவாயும் இருந்தார்

உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும்,

அவர் பிரிவு எனக்கே வேதனையைத் தூண்டுகிறது

என்றால்……..  உங்களுக்கு


அறிவும்
பாசமும் மிகுந்த நான்கு செல்வங்களை

உங்கள் பொறுப்பில் விட்டுள்ளார்

தன் தேவை இனிப் போதுமென

நினைத்தாரோ….. என்னவோ…..


விதி
செய்த சதியால்

காலன் அழைத்திடவே

எம்மை விட்டுப் பிரிந்தாலும்

அவர் நினைவுகள் உயிருள்ளவரை....


ஆறாத்
துயரில் இருக்கும் உங்களுக்கும்

உங்கள் குடும்பத்தினருக்கும்

ஆறுதல்கூறி அண்ணாவின் ஆத்மா

சாந்தியடைப் பிரார்த்திக்கின்றேன்.


நன்றி!


சுதாஜினி
கேதீஸ்வரன்
அபிவிருத்தி உத்தியோகத்தர்,
இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம்.

Comments