வந்தாரை வாழவைக்கும் வடமராட்சி, அதில் இயற்கை எழில் கொஞ்சும் கிராமம் உடுப்பிட்டி. திருமண பந்தத்தின்மூலம் இங்கு இணைந்து கொண்டவர் அமரர் சிவச்சந்திரதேவன் அவர்கள். தான் ஒரு வங்கி அதிகாரி என்ற கர்வமோ, சமூகத்தில் தான் ஒரு சிறந்த பிரஜை என்ற பந்தாவோ இன்றி எல்லோருடனும் இன்முகத்துடன் பழகும் சிறந்த பண்பாளன். சுறுசுறுப்பில் என்றும் அவர் இளை ஞனே‚ அவரது அயலவர் என்ற வகையில், அவரது எளிமையும் இயல்பாய் அமைந்த உதவும் மனப்பான்மையும் உயரிய நோக்கும் என்னைப் பிரமிக்க வைத்திருக்கின்றது. இவையே எம்மண்ணில் அவரை ஓர் உயர்ந்த இடத்தில் எல்லோராலும் வைத்துப்பார்க்கின்ற நிலையை ஏற்படுத்தின.
வடமராட்சியில் சுருக்கெழுத்துக் கழகத்தை ஆரம்பித்து, அதன் ஸ்தாபகராகவும் செயற்பாட்டாளராகவும் இருந்து
அதனைத் திறம்பட நடாத்தி, எத்தனையோ இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வழிகாட்டியாக
விளங்கி, சமூகத்தை மேம்படுத்தியவர் அமரர் அவர்கள்.
இவரிடம் சுருக்கெழுத்துப் பயின்ற எத்தனையோ மாணவர்கள் கல்விப் புலத்தில் மேன்னிலையில்
இருப்பது இவரது தன்னலமற்ற சேவைக்குச் சான்று பகிர்கிறது
நான் உடுப்பிட்டி
அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் ஆசிரியராகக் கடமைபுரிந்த காலத்தில் இவரது மூத்த இரு புதல்வர்களும்
அங்கு கல்வி பயின்றுகொண்டிருந்தனர். அதன் காரணமாக பெறறோர் என்ற வகையிலும் கல்லூரியின்
உயர்ச்சிக்கு உறுதுணையாக நின்றவர் என்ற வகையிலும் சிறந்த கல்வி ஆர்வலர் என்ற வகை யிலும்
உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் நடைபெறும் எந்தவொரு நிகழ்வும் இவரின்றி நடைபெற்றதில்லை.
மூன்று தசாப்தங்களுக்கு
மேலாக திறம்பட நடாத்தப்பட்ட சுருக்கெழுத்துக் கழகம் காலத்தின் கோலம் காரணமாக மூடப்பட
வேண்டிய நிலை ஏற்பட்டபோது, பெரிதும் மனம் கலங்கியநிலையில், கழகத்திலிருந்த ரூபாய் ஒன்பது
இலட்சத்தையும் ஆரம்பத்தில் வகுப்புகள் நடாத்துவதற்கு உதவிய 9 கல்லூரிகளுக்கு தலா ஓர்
இலட்சம் வீதம் வழங்கி, கல்லூரிகளின் நன்மதிப்பைப் பெற்றார் அமரர் அவர்கள். அந்த வகையில்
எமது கல்லூரியான உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் நூலகத்திற்கு ரூபாய் ஓர் இலட்சம் பெறுமதி
யான புத்தகங்களைத் தந்துதவிய கொடையாளர் அமரர் அவர்கள். வடமாகாணத்தின் சிறந்த நூலகமாக
உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் நூலகம் தெரிவுசெய்யப்பட்டு பரிசு பெற்றமைக்கு அமரரால்
வழங்கப்பட்ட நூல்களின் பங்கும் கணிசமானளவு உதவியது என்றால் அது மிகையில்லை.
இந்த வகையில்
எமது மனதில் உயரிய இடத்தைப் பிடித்துக் கொண்ட திரு. சிவச்சந்திரதேவனின் திடீர் மறைவு
வடமராட்சி மண்ணையே உலுக்கிவிட்டது. விதிவசத்தால் சிவனடி சேர்ந்த அமரரின் ஆத்மா சாந்தியடையவும்
அவரின் இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் வழங்கவும் உடுப்பிட்டி
மகளிர் கல்லூரி சமூகம் வேண்டி நிற்கின்றது.
Comments
Post a Comment