திரு. க.வ. சிவச்சந்திரதேவன் அவர்களுடைய சகநண்பன் என்ற முறையில் ஒருசில வார்த்தைகளைச் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். நான் கன்னாதிட்டி மக்கள் வங்கியில் வேலை செய்யும் போது தான் அறிமுகமாகி, நண்பர்களானோம். இவர் எல்லோருடனும் மிகவும் பாசத்துடனும் புன்முறுவலுடனும் தான் பழகுவார்.
நான் அறிந்தவரையில் இவர் பல உதவிகளைப் பலருக்குச் செய்தார். வடமராட்சி, வதிரியில் தட்டெழுத்து, சுருக்கெழுத்து வகுப்புக் களை நடாத்தி பல மாணவர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தார். கொழும்பிலிருந்து உடுப்பிட்டிக்கு வந்தால் என்னைச் சந்திக்காமல் செல்லமாட்டார். அடிக்கடி தொலைபேசியில் சுகம் விசாரிப்பார். இறப்பதற்கு முதல் நாளும் தொலைபேசியில் என்னுடன் கதைத்தார். அவருடைய திடீர் மறைவு கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.
அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி, அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய குடும்பம் சார்பாக எங்கள் அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
அருள்
நண்பன்.
Comments
Post a Comment