வாண் கல்வித் திறமைக்கு வடமராட்சி மண்ணில் காலத்தால் அழியாத மாமனிதர் வரிசையில் தம் கல்விச் சேவையால் உயரிய இடம் பெற்றவர். சிவனேயச் செல்வன், சுயநலம் கருதா பொது நலவாதி, வங்கி முகாமையாளராகக் கடமை புரிந்த போதும் ஆத்ம திருப்தி காணாமையால் தான் பிறந்த மண்ணுக்கும் எதிர்கால சந்ததிக்கும் சேவை புரிய வேண்டும் என்ற உள்ளுணர்வால் உந்தப்பட்டு, இளைய சமூகத்தின் ஆளுமை விருத்திக்கு வழிகாட்டும் வகையில் வதிரிப் பகுதியில் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தை உருவாக்கினார். அக்கழகத்தின் மூலம் வருடந்தோறும் பாடசாலைக் கல்வியை முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கு உகந்த தட்டெழுத்து - சுருக்கெழுத்துக் கல்வியை வழங்கினார். அத்துடன் மட்டுமல்லாது, "பயிற்சி உயர்ச்சி தரும்” என உணர்ந்து, தமது மாணவர்களுக்கு தமது பிரதேச கல்விசார் நிறுவனங்களிலும் கல்விசாரா நிறுவனங்களிலும் பயிற்சி வழங்கியதன் மூலம் அந்நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் உதவினார்.
எமது கல்லூரியில் தமது ஆண்டு விழாக்களை
நடாத்தியதன் மூலம் கல்லூரியை மகிமைப்படுத்தியவர். “வாசிப்பதால் மனிதன் முழுமையடைகிறான்”
என்னும் வாசகத்தை முழுமையாக உணர்ந்ததால், தமது பிரதேச பாடசாலைகளுக்கெல்லாம் நூலக வளர்ச்சிக்கு
நிதி உதவி வழங்கினார். 2014ஆம் ஆண்டில் எமது கல்லூரி நூலகத்திற்கு ஒரு லட்சம் ரூபாயை
அன்பளிப்புச் செய்ததை எப்போதுமே எமது கல்லூரிச் சமூகம் நன்றியுடன் நினைவுகூருகிறது.
சிறந்த நூலகமாக உருவாக இவரது அன்பளிப்பு நூல்கள் பெரிதும் உதவின. இத்தகைய மாண்பாளனின்
மறைவு எழுத்தில் வடிக்க முடியாத இழப்பாகும். ஏழைக்கு எழுத்தறிவித்த அன்னாரின் பூதவுடல்
மறைந்தாலும் புகலுடல் மறைவதில்லை.
“வையத்துள்
வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்"
என்ற பொய்யாமொழிப் புலவரின் வாக்குப்படி
அவரது ஆத்மா இறைவனடியில் சாந்திபெறப் பிரார்த்திப்போம்.
திருமதி பாலராணி ஸ்ரீதரன்
யா/ வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி,
வதிரி,
கரவெட்டி.
Comments
Post a Comment