2010ஆம் ஆண்டு முதன்முதலில் உன்னை பம்பலப்பிட்டியில் சந்தித்த நாளிலிருந்து 10 வருட சகோதர உறவை என்னால் மறக்க முடியவில்லை அண்ணா!
நீ என்னைச் சந்திக்கும் போதெல்லாம் ஒரு பல்கலைக்கழகத்தினுள் இருப்பது போன்று ஓர் உணர்வு. ஒரு தந்தை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீ ஓர் எடுத்துக்காட்டு!
எமது தொழிற்துறை ஒன்றாக இருப்பதுபோல் எம் எண்ணங்களும் உணர்வுகளும் ஒன்றாகவே இருந்தன.
எவரும் எதிர்பாராத வண்ணம் நொடிப்பொழுதில் திடீரெனப் பிரிந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். கண்ணீர் மல்கி நிற்கும் குடும்பத்தாருடன் நானும் கலங்கி நிற்கின்றேன்.
சந்திரனைச் சூடியிருக்கும் சிவனான உன் தேவனிடன் உன் ஆத்மா சாந்திக்காக வேண்டுகிறேன்.
க.சி. மணிமாறன்
முகாமையாளர்,
மக்கள் வங்கி,
வெள்ளவத்தை.
Comments
Post a Comment