Skip to main content

உள்ளத்தால் உயர்ந்தவர் - மனோகரன் குடும்பத்தினர்

"நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு"

என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க, அமரர் வயிரவிப்பிள்ளை சிவச்சந்திரதேவன் அவர்கள் 23.05.2020அன்று இவ்வுலக வாழ்வை விட்டு விண்ணுலகம் எய்தியுள்ளார்.

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்"

என்ற கூற்றுக்கு இணங்க வாழ்ந்து காட்டியவர் அமரர் வயிரவிப்பிள்ளை சிவச்சந்திரதேவன் என்று கூறினால் மிகையாகாது. அன்னார் ஒரு வங்கியாளர் என்ற நிலையைத் தாண்டி, தன் பிள்ளைகளுக்குச் சிறந்த தந்தையாக, நல்ஆசானாக, தோள்கொடுக்கும் தோழனாக தன் முத்திரையைப் பதித்திருந்தார். அன்னார் தான் ஓய்வுபெற்ற காலத்திலிருந்து தன் இறுதிக்காலம்வரை தன் பிள்ளைகளுக்காகவே  தன்னை முழுமையாக அர்ப்பணித்த ஒரு பண்பாளன். தன் பிள்ளைகளின் கல்வியில் அதீத அக்கறை செலுத்திய அன்னார், தன் பிள்ளைகள் தங்களுக்குரிய துறையில் உச்சமடைய வேண்டுமென்று அயராது உழைத்தவர்.

தமது எண்ணங்கள், உற்றார், உறவினர், சம்பிரதாயங்கள், குடும்பம் எல்லாவற்றையும் பக்குவமாக நிறைவுறச்செய்து வாழ்ந்த அன்னாரது வாழ்க்கைமுறை எம் அனைவருக்கும் ஒரு வழிகாட்டலாக உள்ளது. எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் நெருங்கிப் பழகும் பண்புடைய அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் சுற்றத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் திருவடியைப் பிரார்த்திக்கின்றோம்.

மனோகரன் குடும்பத்தினர்
சொய்சாபுர, மொறட்டுவை.

Comments