பிரிவு என்னும் மீளாத் துயரில் அனைவரையும் ஆழ்த்திவிட்டுச் சென்றுவிட்டீரே!
உண்மையில்
உங்கள் இழப்பினை இன்றுவரை ஏற்க எம் உள்ளம்
மறுக்கின்றதே!
அயல்
வீட்டில் இருந்தபோதும் பழகிய நாள் முதலாய் நல்லதோர்
ஆசானாய், வழிகாட்டியாய் இருந்தீரே!
தூரங்கள்
கடந்தபோதும் உங்கள் பிரிவின் துயர் எம்மை வதைக்கின்றதே!
ஆற்றல்
பல கொண்டு அறிவுரைகள் பல சொல்லும் அற்புத
மனிதனின் இழப்பு அனைவரையும் வதைக்கின்றதே!
இன்முகத்துடன்
உதவிகள் பல தன்னூக்கத்துடன் மிளர
நிறைவேற்றிய இனிய ஓர் அயலவரை
இனி நாம் எங்கு காண்போம்!
பண்பட்ட
பக்குவத்துடன் பலருடன் பழகிய நல்ல மனிதரை இனி
எங்கு காண்போம்!
இறப்பென்பது
அனைவருக்கும் பொதுவான ஒன்றுதான்!
எனினும்
உங்கள் இழப்பும் விதிவிலக்கல்ல, இதை
எங்கள் மனம் ஏற்க மறுக்கின்றது!
உங்கள்
நினைவுகள் இன்னும் எம்மைவிட்டு நீங்கவில்லை!
நீங்கா
நினைவுகளுடன்
பிறேம், ரேக்கா, வினோ
Comments
Post a Comment