Skip to main content

நண்பன் சிவச்சந்திரதேவன் - கதிரவேலு மகாதேவன்

நண்பர் .. சிவச்சந்திரதேவனின் எதிர்பாராத மறைவு தமிழ்ச் சங்கத்திற்கு ஓர் இழப்பு என்று சொல்லலாம். அவர் தமிழ்ச் சங்க உறுப்பினராகச் சேர்ந்து சில ஆண்டுகள் ஆகின்றன. எங்கள் நிர்வாக சபை உறுப்பினராக இணைந்து கொள்வதற்கு முன்னோடியாக 75 பேர் கொண்ட பேரவையில் 2019இல்  சேர்ந்தார். பேரவைக் கூட்டங்களிலும், குழுக்கூட்டங்களிலும் ஆர்வமாகக் கலந்துகொண்டு உணர்வு பூர்வமாக உரையாற்றியிருந்தார். அவற்றினைப் பார்த்து "நீங்கள் அடுத்த ஆண்டு  செயற்குழுவில் இணைந்து கொள்ள முடியும்" என்று நான் அவரிடமே கூறியிருக்கிறேன். அவரது உரைகள் எங்கள் மனங்களைத் தொட்டன. அவர் கூறிய அறிவுரைகள் எமக்குப் பலமூட்டின.

புலோலியைப் பிறப்பிடமாகக்கொண்டு, கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும், ஹாட்லிக் கல்லூரியிலும் பயின்று, பின்னர் யாழ். தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்று, மக்கள் வங்கியில் சுருக்கெழுத்தாளராகவும் பின்னர் அந்தரங்கச் செயலாளராகவும் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். அந்தத்துறையில் விரிவுரையாளராகவும் சில நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். தமிழ்ப் பண்பாடுகளிலும் கலாசார விழுமியங்களிலும் அக்கறை கொண்டி ருந்த அவரின் பிரிவு துணைவியாரையும் பிள்ளைகளையும் பெரிதும் பாதிப்படைய வைத்துள்ளது. தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகக் குழு சார்பாக எமது கவலையைத் தெரிவிப்பதுடன்இ அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

கதிரவேலு மகாதேவன்
துணைச் செயலாளர்,
தமிழ்ச் சங்கம்.

Comments