Skip to main content

மறைந்தும் மனங்களில் என்றென்றும் மறையாத மாமனிதர் - ம. சுவாமிநாதன்

அமரர் திரு... சிவச்சந்திரதேவன் அவர்கள், தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்திற்காக அர்ப்பணித்த அமரர் திரு... சிவச்சந்திரதேவன் அவர்கள் இவ்வுலகைவிட்டு நீத்த செய்திகேட்டு மிகவும் துயருற்றேன்.

1985ஆம் ஆண்டை அண்மித்த காலப்பகுதியில் எனது கணவர் அமரர் வி.செ.சுவாமிநாதன் அவர்கள் சுருக்கெழுத்துக் கழக விழா வொன்றில் அன்னார் மனநலம் காணவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதாகத் தெரிவித்திருந்தார். திருமணத்தில் அவருக்கு ஏற்பட்ட சில இடையூறுகள் காரணமாக எமது வீட்டிலேயே  பொன்னுருக்கல் வைபவம் நடந்தேறியது. நன்மக்கட் பேறுகளுடன் மனைவியோடு இல்லறமாம் நல்லறத்தில் இன்புற்றிருந்தவேளை காலனவனின் இரக்கமற்ற செயலால் துன்பக் கடலில் மூழ்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க வார்த்தைகளின்றித் தவிக்கின்றேன். பல வீடுகளில் அடுப்பு எரிகின்றதென்றால் அதற்கு அன்னாரின் சேவையே காரணம். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டுமல்ல, கொழும்பில்கூட நீதிமன்றங்கள், வங்கிகள் போன்ற வற்றில் தொழில்புரியும் தட்டெழுத்தாளர்கள் மற்றும் சுருக்கெழுத்தாளர்கள் அன்னாரிடம் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தில் பயின்ற மாணவர்கள்  என்பது யாவரும் அறிந்ததே

மெய்வருத்தம் பாராது, பசி நோக்காது, கண் துஞ்சாது சுருக்கெழுத்துக் கழகத்துக்காய் தன்னை அர்ப்பணித்த அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சி நிற்கின்றோம். 

திருமதி . சுவாமிநாதன்

Comments