மனிதர்களைச்
சந்திப்பதைக் காட்டிலும் நல்ல மனதுடைய மனிதர்களைச் சந்திப்பதென்பது ஒரு பெரும் ஆசீர்வாதம்.
வாசிப்பும்
நூல்களும் உலகைக் கைக்குள் வைத்திருப்பன. அறிவின் தேடலைத் தொடர்வது என்பதைக் கடந்து அதை பிற மனிதர்களுக்கும்
தூண்டுதல் என்பதே நற்குணத்திற்கு அடையாளமாக இருக்கிறது.
நீரைக்
கடந்து எட்டிப் பார்க்க விரும்பும் மீன்களை கருத்தாய்
கரைதாண்டிப் பார்வை கொடுக்கத் தூண்டும் ஓர் செயலின் விளைவு
அக் கடலினும் விசாலமானதாயிருக்கும்.
இன்முகம், இனிமை, நல்மனம், அறிவின்
தேடலும் அதைத் தூண்டலும் எனும் பண்புகள் அத்தகு சக்தி கொண்டவையாயிருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
அறிவும்
பண்பும் இன்னும் இன்னும் தேடிப் பார்க்கும், அதை பிற மனிதர்களுக்கும்
ஊக்குவித்தலும் பெரும் பொக்கிஷ செயல்களாய் இருப்பதும் எக்காலமும் அழியா நினைவாய் இருக்கவும் உறுதிப்படுத்துவன.
சரீரம்
மரிக்கலாம், வழிகாட்டல்களும் நினைவுகளும் எங்ஙனம் மறைந்து போகக்கூடும்.
திரு.வ.சிவச்சந்திரதேவன் அவர்கள்
நல்ல மனதுடையவர் என்பதோடு மட்டுமல்லாமல் அறிவின் தேடலும் உள்ளவர் என்பது வியக்கத்தக்கதும் பெருமைக்குரியதுமாகும். பிறருக்கு ஆசீர்வாதமாய் விளங்கும் அம்மனிதரை
மரியாதையோடு நினைவுகூருகிறேன்.
அன்னாரின்
ஆத்மா திருப்தியாக இளைப்பாறட்டும்‚
ஓம்
சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
சுரநுதா
ஜெயருபன் (சிவகுருநாதப்பிள்ளை)
கொழும்பு.
Comments
Post a Comment